மேலும் அறிய

TNPSC Results: டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளில் வெளிப்படைத் தன்மை வேண்டாமா?- திமுக அரசிடம் ஓபிஎஸ் கேள்வி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் முடிவுகளில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று திமுக அரசிடம் ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார். 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் முடிவுகளில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று திமுக அரசிடம் ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்துத் தமிழ்நாடு முன்னாள்‌ முதலமைச்சர்‌ ஓ.பன்னீர்செல்வம்‌ இன்று வெளியிட்டுள்ள‌ அறிக்கை:

''தி.மு.க.வின்‌ தேர்தல்‌ அறிக்கை எண்‌ 486-ல்‌, “தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌, ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வெளிப்படையான நேர்மையான தேர்வு முறை நடந்திட அனைத்து நடவடிக்கைகளும்‌ உறுதியாக மேற்கொள்ளப்படும்‌” என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்‌, இந்த வாக்குறுதியைகூட நிறைவேற்ற முடியாத அரசாக தி.மு.க. அரசு விளங்கிக்‌ கொண்டிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றரை லட்சம்‌ காலிப்‌ பணியிடங்கள்‌ நிரப்பப்படும்‌ என்ற வாக்குறுதியினை அளித்து ஆட்சிக்‌ கட்டிலில்‌ அமர்ந்த தி.மு.க., கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில்‌, வாக்குறுதியில்‌ உள்ள பத்து விழுக்காடு காலிப்‌ பணியிடங்களைக்‌ கூட நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும்‌, காலிப்‌ பணியிடங்கள்‌ அதிகரித்துக்‌ கொண்டே இருக்கின்றன என்பதும்‌ அனைவரும்‌ அறிந்த உண்மை.

இந்த நிலையில்‌ சென்ற ஆண்டு குரூப் 2 மற்றும்‌ 2ஏ பதவிகளுக்கான 5,529 இடங்களுக்கான முதல்‌ நிலைத்‌ தேர்வினை தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ நடத்தியது. இந்த தேர்வில்‌ கிட்டத்தட்ட பத்து லட்சம்‌ பேர் பங்கேற்றனர்‌. இந்த முதல்‌ நிலைத்‌ தேர்வு எழுதிய பத்து லட்சம்‌ பேரில்‌, ஒரு பதவிக்கு பத்து பேர்‌ வீதம்‌ 5,529 பதவிகளுக்கு, முன்னிலை மதிப்பெண்‌ பெற்ற கிட்டத்தட்ட 60 ஆயிரம்‌ பேர்கள்‌ பிரதானத்‌ தேர்வு எழுத தகுதி உடையவர்கள்‌ என்று தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ அறிவித்து, அதற்கான முடிவினையும்‌ வெளியிட்டது.

இதன்‌ அடிப்படையில்‌, தேர்வு எழுதியவர்கள்‌ தங்களுடைய தேர்வு முடிவுகளையும்‌, தாங்கள்‌ ஒவ்வொரு பாடத்திலும்‌ எடுத்த மதிப்பெண்களையும்‌ தெரிந்துகொள்ள முற்பட்டபோது, தேர்வு முடிவுகளை மட்டும்‌தான்‌ தெரிந்துகொள்ள முடிந்தது என்றும்‌, தேர்வில்‌ பெற்ற மதிப்பெண்களை தெரிந்துகொள்ள முடியவில்லை என்றும்‌ தேர்வு எழுதியவர்கள்‌ கூறுகின்றனர்‌.

பொதுவாக, மத்திய அரசு பணியிடங்களுக்கான தேர்வினை நடத்தும்‌ பணியாளர்‌ தேர்வு ஆணையம்‌, ரயில்வே தேர்வு வாரியம்‌, வங்கித்‌ தேர்வுகளை நடத்தும்‌ அமைப்புகள்‌ ஆகியவை தேர்வு முடிவுகளை வெளியிடும்போதே, ஒவ்வொருவரும்‌, ஒவ்வொரு பாடத்தில்‌ பெற்ற மதிப்பெண்களையும்‌ வெளியிடுவது வழக்கம்‌. தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படும்‌ தேர்வுகளுக்கான மதிப்பெண்கள்‌ வெளியிடப்பட்டதை நானும்‌
கேள்விபட்டு இருக்கிறேன்‌. ஆனால்‌, தற்போதைய குரூப்‌ 2, 2ஏ முதல்நிலைத்‌ தேர்வு முடிவுகளில்‌ மதிப்பெண்களின்‌ விவரம்‌ வெளியிடப்படவில்லை.

ஒருவேளை, முதல்‌ நிலைத்‌ தேர்வு என்பதால்‌ மதிப்பெண்‌ பட்டியல்‌ வெளியிடப்படவில்லையா என்று தெரியவில்லை. இதன்‌ காரணமாக, தங்களைவிட குறைவான மதிப்பெண்‌ பெற்றவர்கள்‌ பிரதானத்‌ தேர்விற்கு தேர்ச்சி பெற்றுள்ளார்களா என்பதை கண்டறிய முடியாத சூழ்நிலை ஒவ்வொருவருக்கும்‌ ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல்‌, அடுத்த தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்‌கொள்ள இந்தத்‌ தேர்வின்‌ மதிப்பெண்கள்‌ தங்களுக்கு ஓர்‌ அடிப்படையாக அமையும்‌ என்றும்‌ தேர்வு எழுதியவர்கள்‌ கருதுகிறார்கள்‌. 

மதிப்பெண்களை வெளியிடாதது தேர்வு எழுதியவர்கள்‌ மத்தியில்‌ பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்தத்‌ தேர்வாக இருந்தாலும்‌, அதில்‌ வெளிப்படைத்‌ தன்மை, ஒளிவுமறைவற்ற தன்மை கடைபிடிக்கப்பட வேண்டும்‌ என்பதில்‌ யாருக்கும்‌ மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. குரூப்‌ 2, 2ஏ முதல்நிலைத்‌ தேர்வுக்கான மதிப்பெண்கள்‌ வெளியிடப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு தேர்வு எழுதிய ஒவ்வொருவர்‌ மத்தியிலும்‌ எழுந்துள்ளது. இதனை வெளியிடுவதுதான்‌ பொருத்தமான ஒன்று என்பது அனைவரின்‌ ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ இதில்‌ உடனடியாக கவனம்‌ செலுத்தி, குரூப்‌ 2, 2ஏ முதல்நிலைத்‌ தேர்வில்‌ தேர்வு எழுதிய ஒவ்வொருவரும்‌ பெற்ற மதிப்பெண்களை வெளியிடத்‌ தேவையான நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென்றும்‌, இனி வருங்காலங்களில்‌ எந்தத்‌ தேர்வாக இருந்தாலும்‌ அதன்‌ மதிப்பெண்களை ஒளிவுமறைவின்றி வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ வலியுறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌’’.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.‌

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

அகில இந்திய தொழிற்தேர்வு: தனித்தேர்வர்களுக்கு மாத உதவித்தொகையுடன் அரிய வாய்ப்பு!
அகில இந்திய தொழிற்தேர்வு: தனித்தேர்வர்களுக்கு மாத உதவித்தொகையுடன் அரிய வாய்ப்பு!
PM Yasasvi Scholarship : மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! அள்ளிக்கொடுக்கும் PM-YASASVI திட்டம்- விண்ணப்பிப்பது எப்படி.?
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! அள்ளிக்கொடுக்கும் PM-YASASVI திட்டம்- விண்ணப்பிப்பது எப்படி.?
குடும்பத்துடன் பயணிக்க சிறந்த 7 சீட்டர் கார்! குறைந்த விலையில் அசத்தும் டாப் மாடல்கள்!
குடும்பத்துடன் பயணிக்க சிறந்த 7 சீட்டர் கார்! குறைந்த விலையில் அசத்தும் டாப் மாடல்கள்!
Puducherry CENTAC: நீட் இல்லாத கலை, அறிவியல் படிப்புகளுக்கு மாப்-அப் ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு!
Puducherry CENTAC: நீட் இல்லாத கலை, அறிவியல் படிப்புகளுக்கு மாப்-அப் ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amudha IAS : ’நெல் கொள்முதல் தேக்கம் – பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்’ ரூல்ஸ் ராமனுஜமாக அமுதா ஐ.ஏ.எஸ்..!
’நெல் கொள்முதல் தேக்கம்' பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்..!
Vijay Speech: ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
Dharapuram By Election: ராஜ்மோகன் சொல்லி சத்யபாமா அழுதாரா? .. வெடித்த அடுத்த சர்ச்சை.. உண்மை என்ன தெரியுமா?
Dharapuram By Election: ராஜ்மோகன் சொல்லி சத்யபாமா அழுதாரா? .. வெடித்த அடுத்த சர்ச்சை.. உண்மை என்ன தெரியுமா?
Volkswagen SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட், கைலாக் மாதிரியே ஹிட் அடிக்கனும்..! ஃபோக்ஸ்வாகன் எஸ்யுவி - போலோ கம்பேக்?
ரூ.9 லட்சம் பட்ஜெட், கைலாக் மாதிரியே ஹிட் அடிக்கனும்..! ஃபோக்ஸ்வாகன் SUV - போலோ கம்பேக்?
காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள்! முன்பதிவு எப்போது?
காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள்! முன்பதிவு எப்போது?
TN Weather News: இடி, மின்னலுடன் கனமழை..! இன்று 13 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் கனமழை..! இன்று 13 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Gold and silver rate today : அக்டோபர் முதல் நாளில் நகைப்பிரியர்களுக்கு நிம்மதி.! குறைந்தது தங்கம் விலை-ஒரு சவரன் என்ன விலை.?
அக்டோபர் முதல் நாளில் நகைப்பிரியர்களுக்கு நிம்மதி.! குறைந்தது தங்கம் விலை-ஒரு சவரன் என்ன விலை.?
Seeman Speech: ”நான் படத்துக்கே போறன் போங்கடா. தம்பி சிவகார்த்திகேயன் வர சொல்றாரு
”நான் படத்துக்கே போறன் போங்கடா. தம்பி சிவகார்த்திகேயன் வர சொல்றாரு" சீமான் திடீர் முடிவு
Embed widget