மேலும் அறிய

குழந்தைகளிடையே ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு; அந்தமானில் சிறப்புத் திட்டம் தொடக்கம்

அடுத்த மூன்று மாதங்களுக்கு அங்கன்வாடி பணியாளர்களால் அடையாளம் காணப்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் 650 பெட்டிகள் வழங்கப்படும்.

குழந்தைகளிடையே ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளைக் கண்டறிந்து  முற்றிலுமாக அவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையின் அந்தமானில் ஒரு முன்னெடுப்பாக, முதற்கட்டமாக வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்ட நிர்வாகம் சார்பில், மூன்று உட்கோட்டங்களில் ஊட்டச்சத்து குறைபாடுகளுடனான குழந்தைகளை அடையாளம் கண்டு, ஊட்டச்சத்து போஷாக்கு கிட்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த திட்டத்தின் மூலம் "குபோஷன் முக்த் பஞ்சாயத்து" எனும் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார் அந்தமான் & நிக்கோபர் தீவுகளின் தலைமைச் செயலாளர் கேசவ் சந்திரா.

வளரிளம் பருவத்தினரின் ஆரோக்கியம்

தொடக்க நிகழ்ச்சியின்போது பேசிய வடக்கு மற்றும் மத்திய அந்தமான மாவட்டத்தின் துணை ஆணையர் தில்குஷ் மீனா, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உடனடித் தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் உணவுப் பொருட்களை உள்ளடக்கிய இந்த கிட்டுகளின் விநியோகம், வளரிளம் பருவத்தினரின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான நிர்வாகத்தின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

"எங்கள் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்வது எங்களின் தலையாய கடமை. இந்த ஊட்டச்சத்து கிட்கள் விநியோகம் முக்கியமான ஒன்று. இது வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்திற்கு ஆரோக்கியமான மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்னும் எண்ணத்தின் அர்ப்பணிப்பு"என்று தில்குஷ் மீனா தெரிவித்தார்.

நிலையான செயல்பாட்டு நெறிமுறை உருவாக்கம்

இந்த திட்டத்தை சுமூகமாக செயல்படுத்துவதற்காக, பல்வேறு பங்களிப்பாளர்களுக்கான நிலையான செயல்பாட்டு நெறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்துகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மூன்றடுக்கு குழு அமைப்பு, அங்கன்வாடி அளவில், இரண்டாவதாக வட்டார அளவிலும், மூன்றாவதாக மாவட்ட அளவிலும், முன்னெடுத்து அவ்வப்போது மதிப்பீடு செய்து கண்காணிப்பதை இது உறுதி செய்யும்.

முதற்கட்டமாக சுமார் 2000 ஊட்டச்சத்து பெட்டகங்கள விநியோகிக்கப்பட உள்ளன,  அவற்றில் பின்வருவன அடங்கும்.

  1. உடைத்த கோதுமை : 500 கிராம்
  2. பேரிச்சை சிரப் : 500 கிராம்
  3. நெய்: 200 மில்லி
  4. சோயா புரதம்: 250 கிராம்
  5. பச்சைப்பயறு : 500 கிராம்
  6. உலர்ந்த வேர்க்கடலை: 500 கிராம்

அடுத்த மூன்று மாதங்களுக்கு அங்கன்வாடி பணியாளர்களால் அடையாளம் காணப்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் 650 பெட்டிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget