watch video: மாலை, மரியாதையுடன் பள்ளிக்கு ஊர்வலமாக வந்த மாணவர்கள் - நெகிழ வைத்த ஆசிரியர்கள்..!
மாலை மரியாதை, சீர்வரிசையுடன் புதிய மாணவர்களை பள்ளிக்கு ஊர்வலமாக அழைத்து வந்து திம்மையன்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி நிர்வாகம் அசத்தியுள்ளார்.

தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்காக பள்ளிகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. மேலும் அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது நடைபெற்று வரும் நிலையில், தமிழக பள்ளி கல்வித்துறையானது அரசு பள்ளிகளில் மணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த விழிப்புணர்வு பேரணி, ஒலித்த வெட்ட ஏற்பாடு செய்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அரசு பள்ளிகளில் கல்வி கற்பதால், மாணவர்களின் பயன் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்திட அனைத்து அரசு பள்ளி நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தியுள்ளன.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட கல்வி துறையானது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட திம்மையன்பேட்டை பகுதியில் செயல்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் புதிதாக ஒன்றாம் வகுப்பு முதல் நாள் வகுப்பு தொடக்க விழா இன்று நடைபெற்றது.
மாலை மரியாதை, சீர்வரிசையுடன் புதிய மாணவர்களை பள்ளிக்கு ஊர்வலமாக அழைத்து வந்து... திம்மையன்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி நிர்வாகம் அசத்தல் pic.twitter.com/ycAybojCm1
— Kishore Subha Ravi (@Kishoreamutha) June 16, 2022
அரசு பள்ளியில் புதிதாக ஒன்றாம் வகுப்பு சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளை உற்சாகத்துடன் வரவேற்கும் வகையில் அவர்களுக்கு அருகிலுள்ள கோவிலிருந்து மாலை அணிவித்து மலர் தூவி பள்ளிக்கு வரவேற்றனர். மேலும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு குரு மரியாதை செய்யும் வகையில் சீர்வரிசைகளுடன் ஊர்வலத்தில் பங்கேற்று பள்ளிக்கு வந்தடைந்தனர்.

தொடர்ந்து முதல் நாள் வகுப்பு ஆரம்பமாக மாணவ, மாணவிகளை அரிசியில் எழுத வைத்து ஆரம்பித்தனர். அப்பள்ளியின் தலைமையாசிரியர் லலிதா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வட்டார கல்வி அலுவலர் நந்தாபாய், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வரவேற்று புதிய மாணவர்களுக்கு பாடநூல் புத்தகங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ ஸ்ரீ, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கங்காதரன், ஆசிரியைகள், பெற்றோர்கள், அப்பகுதியின் முக்கியஸ்த்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















