மேலும் அறிய

Kalai Thiruvizha 2024: ஆடல், பாடலில் ஆர்வமா? 1 முதல் பிளஸ் 2 வரை மாணவர்கள் கலைத் திருவிழாவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலானமாணவர்கள் கலைத் திருவிழாவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வாரியத்தில் 6 முதல்‌ 12-ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ அனைத்து மாணவர்களின்‌ கலைத் ‌திறனை வெளிப்படுத்தும்‌ வகையில்‌ கலைத்திருவிழா அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகளாக வட்டார‌, மாவட்ட‌ மற்றும்‌ மாநில அளவில்‌ நடைபெற்று வந்தது.

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கும் கலைத் திருவிழா

அதனைத்‌ தொடர்ந்து இக்கல்வியாண்டு முதல்‌ அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 5 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களும்‌ பங்கேற்கும்‌ வகையில்‌ கலைத்திருவிழா நடத்தப்படும்‌ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.

இதன்படி, தமிழகத்தில்‌ உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின்‌ கலைத்‌ திறன்களை வெளிக்கொணரும்‌ விதமாக, அரசுப்‌ பள்ளி மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகள்‌ கலை அரங்க செயல்பாடுகள் மூலம்‌ வழங்கப்பட்டது. 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கு, பள்ளி, வட்டாரம், மாவட்டம்‌ மற்றும்‌ மாநில அளவில்‌ கலைத்திருவிழா போட்டிகள்‌ நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும்‌ சான்றிதழ்களும்‌ வழங்கப்பட்டன.

கலையரசன்‌, கலையரசி பட்டம்

மாநில அளவில்‌ கலையரசன்‌, கலையரசி பட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரால்‌ விருதுகளும்‌ சான்றிதழ்களும்‌ வழங்கப்பட்டன. அடுத்தடுத்த ஆண்டுகளில் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் கலைத் திருவிழா விரிவுபடுத்தப்பட்டது.

2024-25 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு பள்ளிகளில்‌ 1 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கும்‌ தனித்தனியே கலைத்திருவிழா போட்டிகள்‌ நடத்தப்பட உள்ளது.

கலைத் திருவிழா 2024-25

கடந்த ஆண்டு இக்கலைத்திருவிழா போட்டிகள்‌ "சங்கமிப்போம்‌ சமத்துவம்‌படைப்போம்‌" என்ற மையக்கருத்தின்‌ அடிப்படையில்‌ நடைபெற்றது. அதுபோன்று இந்த ஆண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள்‌, மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும்‌ வளப்படுத்துதல்‌ சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்‌ நோக்கத்துடன்‌ "சூழல்‌ பாதுகாப்பு அனைவரின்‌ பொறுப்பு" என்ற மையக்கருத்தின்‌ அடிப்படையில்‌ நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

ஆக.28 வரை அவகாசம்

முதல்கட்டமாக பள்ளி அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 22 முதல் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. பங்கேற்பாளர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் உள்ளீடு செய்ய ஆக.28 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, வெற்றி பெற்றவர்களின் விவரங்களை செப்.3-க்குள் உள்ளீடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்தத் தேதி செப்டம்பர் 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கலைத்திருவிழா 2024-25 பிரிவுகள்‌

2024-25 ஆம்‌ ஆண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள்‌ பின்வருமாறு ஐந்து பிரிவுகளில்‌ நடைபெறும்‌.

பிரிவு 1-  1 மற்றும்‌ 2 ஆம்‌ வகுப்பு
பிரிவு 2 - 3 முதல்‌ 5 ஆம்‌ வகுப்பு வரை
பிரிவு 3 - 6 முதல்‌ 8 ஆம்‌ வகுப்பு வரை
பிரிவு  4 - 9 மற்றும்‌ 10 ஆம்‌ வகுப்பு
பிரிவு 5 - 11 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!
தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Embed widget