மேலும் அறிய

JEE Main: ஜேஇஇ மெயின் தேர்வில் குளறுபடியா? பரபரப்பு விளக்கம் அளித்த என்டிஏ

ஜேஇஇ முதன்மைத் தேர்வு இரண்டாவது அமர்வைப் பொறுத்தவரை, பதிவேற்றப்பட்ட விடைக் குறிப்புகள் தற்காலிகமானவை மட்டுமே.- என்டிஏ.

ஜேஇஇ மெயின் தேர்வில் குளறுபடி நடைபெற்றதாகவும் விடைக் குறிப்பில் தவறுகள் நிகழ்ந்திருப்பதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டிய நிகழ்வில், என்டிஏ பரபரப்பு விளக்கம் அளித்துள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வு இரண்டாவது அமர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்பு, கேள்வித் தாள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட பதில்களை தேசியத் தேர்வுகள் முகமை அண்மையில் வெளியிட்டது. இதில், பல்வேறு குளறுபடிகள், தவறுகள் நிகழ்ந்திருப்பதாக மாணவர்கள், பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

9 கேள்விகளில் குளறுபடிகள்

தற்காலிக விடைக் குறிப்பில் 9 கேள்விகள் தவறாக உள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இயற்பியல் பாடத்தில் இருந்து 4 கேள்விகள், வேதியியல் பாடத்தில் 3 வினாக்கள் மற்றும் கணிதப் பாடத்தில் 2 கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது.

எனினும் இதற்கு என்டிஏ பதில் அளித்துள்ளது. இதுகுறித்து தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுக் கூறப்பட்டு உள்ளதாவது:

வெளிப்படையான தேர்வு செயல்முறை

’’என்டிஏ எப்போதும் ஒரு வெளிப்படையான தேர்வு செயல்முறையையே பின்பற்றி வருகிறது. தேசியத் தேர்வுகள் முகமை தற்காலிக விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டவுடன், தேர்வர்கள் தங்களின் பதிவு செய்யப்பட்ட பதில்களைப் பார்க்க அனுமதிக்கிறது. தற்காலிக விடைக் குறிப்புக்கான ஒவ்வொரு சவாலையும் NTA மிகுந்த தீவிரத்துடன் கருதுகிறது.

ஆன்சர் கீயை ஆட்சேபிக்கும் செயல்முறை, அனைத்து தேர்வர்களுக்கும் நியாயமான மற்றும் நம்பகமான அமைப்பை உறுதி செய்வதில் ஒரு முக்கிய பகுதியாகும். "Answer Key Challenge" செயல்முறையின் நோக்கம் எந்தவொரு ஒழுங்கின்மையையும் நீக்கி நியாயத்தை உறுதி செய்வதே.

மதிப்பெண்களைத் தீர்மானிக்கும் இறுதி விடைக்குறிப்பு

ஜேஇஇ முதன்மைத் தேர்வு இரண்டாவது அமர்வைப் பொறுத்தவரை, பதிவேற்றப்பட்ட விடைக் குறிப்புகள் தற்காலிகமானவை மட்டுமே. JEE (முதன்மை) அமர்வு- IIக்கான இறுதி விடைக் குறிப்புகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இறுதி விடைக்குறிப்புகளால் மட்டுமே மதிப்பெண் தீர்மானிக்கப்படுகிறது.

தற்காலிக விடைக்குறிப்புகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பது சரியானதோ, விரும்பத்தக்கதோ அல்ல. அதனால், தேவையற்ற சந்தேகம் மற்றும் பதற்றத்தை உருவாக்கும் அறிக்கைகளால் தேர்வர்கள் தவறாக வழிநடத்தப்படக் கூடாது. இதை அனைத்துத் தேர்வர்களுக்கும் NTA அறிவுறுத்தவும் தெரிவிக்கவும் விரும்புகிறது’’.

இவ்வாறு தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

TN Quarterly Exam: மாணவர்களுக்கு இன்று தொடங்கிய காலாண்டுத் தேர்வு: எத்தனை நாள் விடுமுறை? பள்ளிகள் திறப்பு?
TN Quarterly Exam: மாணவர்களுக்கு இன்று தொடங்கிய காலாண்டுத் தேர்வு: எத்தனை நாள் விடுமுறை? பள்ளிகள் திறப்பு?
தனியார் கல்லூரியின் BC, MBC மாணவர்களுக்கும் கல்விக் கட்டண உதவி வழங்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை
தனியார் கல்லூரியின் BC, MBC மாணவர்களுக்கும் கல்விக் கட்டண உதவி வழங்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை
மோடியின் திறம்பட்ட தலைமை: 7.8% பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியா சாதனை - அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மோடியின் திறம்பட்ட தலைமை: 7.8% பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியா சாதனை - அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பி.டெக் 2-ம் ஆண்டு சேர்க்கை: செப்.18-ல் சென்டாக் சிறப்புக் கலந்தாய்வு... யாரெல்லாம் பங்கேற்கலாம்? வெளியான முழு விவரம் !
பி.டெக் 2-ம் ஆண்டு சேர்க்கை: செப்.18-ல் சென்டாக் சிறப்புக் கலந்தாய்வு... யாரெல்லாம் பங்கேற்கலாம்? வெளியான முழு விவரம் !

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaaladi Karthik : ‘அன்பில் மகேஸின் வலதுகரம் - குறி வைத்த போலீஸ்’ யார் இந்த வாளாடி கார்த்திக்..?
‘குறி வைத்த போலீஸ் – அன்பில் மகேஸின் வலதுகரம்’ யார் இந்த வாளாடி கார்த்திக்..?
Anbil Mahesh Case : 'அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்கு’ காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!
'அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்கு’ காவல்துறை வெளியிட்ட அறிக்கை..!
Rain Alert: இன்று 9 மாவட்டங்களிலும், நாளை 8 மாவட்டங்களிலும் கனமழை பொளக்கும் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 9 மாவட்டங்களிலும், நாளை 8 மாவட்டங்களிலும் கனமழை பொளக்கும் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
kN Nehru: ”திமுகவினரை குறிவைத்து அடிக்கும் விஜய் அரசு” எல்லாவற்றிற்கும் நாங்கள் தயார் என கே.என். நேரு சவால்
”திமுகவினரை குறிவைத்து அடிக்கும் விஜய் அரசு” எல்லாவற்றிற்கும் நாங்கள் தயார் என கே.என். நேரு சவால்
Anbil Mahesh : ’நில்லுங்க பிரச்சாரத்துக்கு போகக் கூடாது’ அன்பில் மகேஸ் வீட்டுக்கு போலீஸ் சென்றது ஏன் ?
Anbil Mahesh : ’நில்லுங்க பிரச்சாரத்துக்கு போகக் கூடாது’ அன்பில் மகேஸ் வீட்டுக்கு போலீஸ் சென்றது ஏன் ?
Chennai Press Club: 8 மாதம் கழித்து அரெஸ்ட் ஏன்? நக்கீரன் பிரகாஷ் கைதுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
8 மாதம் கழித்து அரெஸ்ட் ஏன்? நக்கீரன் பிரகாஷ் கைதுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
Attack On Mecca: இஸ்லாமியர்களின் புனித தலத்திற்கு வார்னிங் - ஹவுதிக்களால் அதிர்ந்துபோன சவுதி, மக்கள் பீதி
இஸ்லாமியர்களின் புனித தலத்திற்கு வார்னிங் - ஹவுதிக்களால் அதிர்ந்துபோன சவுதி, மக்கள் பீதி
Anbil Mahesh Raid: அடுத்த டார்கெட்..! திமுகவின் அன்பில் மகேஷ் வீட்டில் போலீசார் சோதனை - ரூ.100 கோடி விவகாரம்
அடுத்த டார்கெட்..! திமுகவின் அன்பில் மகேஷ் வீட்டில் போலீசார் சோதனை - ரூ.100 கோடி விவகாரம்
Embed widget