மேலும் அறிய

16 ஆண்டு கடந்தும் துடைக்கப்படாத அநீதி; பாழாகும் மாணவர் எதிர்காலம்- திமுக அரசு நடவடிக்கை எடுக்குமா?

2009-ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கடந்த டிசம்பர் 26  முதல் சென்னையில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மாணவர்களின் நலன் கருதி இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, ‘’தமிழகத்தில்  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2009-மே மாதம் 31-05-2009 தேதி வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே அடிப்படை  ஊதியத்தில் ரூ.3,170 ஊதிய முரண்பாடு நிலவுகிறது. இதனால் 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை குறைவான ஊதியம்தான் அளிக்கப்படுகிறது.

16 ஆண்டு கடந்தும் அநீதி துடைக்கப்படவில்லை

2006-11 ம் ஆண்டு காலத்தில் கலைஞர்  கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில்தான் மக்கள் நலப்பணியாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி போல  இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டது. பின்னர் 16 ஆண்டுகளை கடந்தும் இந்த அநீதி துடைக்கப்படவில்லை.  இந்த அநீதியைக் களைய வேண்டும்; சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி 2009-ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கடந்த டிசம்பர் 26  முதல் சென்னையில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை கைது செய்து அடைத்து வைப்பது, போராடும் ஆசிரியர்களை கைது செய்து இரவு நேரங்களில் சென்னைக்கு வெளியில் வெகுதொலைவில் கொண்டு சென்று இறக்கி விடுவது என திமுக அரசு ஈடுபட்டு வருகிறது.

கல்வி கடுமையாக பாதிப்பு

டிசம்பர் 26-ம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தைத் தொடங்கிய போது, பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதனால், ஆசிரியர்களின் போராட்டத்தால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், அரையாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. அதன்பின் நடக்கும் போராட்டத்தால் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலங்களில் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் இவ்வளவு நாள்கள் நீடித்ததில்லை; மாணவர்களின் படிப்பும் இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டதில்லை. இன்னும் ஒரு மாதத்தில்  ஆண்டுத் தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், ஆசிரியர்களின் போராட்டம் நீடித்தால் மாணவர்கள் மேலும் மோசமாக பாதிக்கப்படுவார்கள்.

ஆனால், இதுகுறித்த எந்தக் கவலையும் திமுக அரசுக்கு இல்லை. ஒருபுறம் ஆசிரியர்களுக்கு அநீதி தொடர்கிறது; இன்னொருபக்கம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது எனும் போது, ஆசிரியர்களுடன் பேச்சு நடத்தி சிக்கலுக்குத் தீர்வு காண்பது தான் மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசின் கடமையாக இருக்க முடியும்.

நிதிநிலை சரியானவுடன்..

ஆனால், 25-ஆம் நாளாக போராட்டம் நீடிக்கும் போதிலும், ஆசிரியர்களின் கோரிக்கையை  ஏற்றுக்கொள்ள திமுக அரசு மறுத்து வருகிறது. இது தொடர்பாக பல முறை பேச்சுகள் நடத்தப்பட்ட போதிலும், ‘‘நிதிநிலை சரியானவுடன் ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்’’ என்பதையே அரசு மீண்டும், மீண்டும் கூறி வருகிறது. இதை ஏற்றுக்கொள்ள ஆசிரியர்கள் தயாராக இல்லை. அவர்களின் நிலைப்பாடு சரியானதும் கூட.

சென்னையில் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை போராட்டம் நடைபெற்றது. அதையடுத்து ஆசிரியர்களுடன் பேச்சு நடத்திய அமைச்சர்கள் குழுவினர், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு கோரிக்கை தொடர்பாக ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய 3 உறுப்பினர் குழு அமைக்கப் பட்டிருப்பதாகவும், அந்தக் குழு அடுத்த 3 மாதங்களில் தாக்கல் செய்த பின், அதனடிப்படையில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தனர். ஆனால், அதன்பின் 3 ஆண்டுகளாகும் நிலையில்  அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை; ஆசிரியர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. இப்படிப்பட்ட அரசின் வெற்று வாக்குறுதிகளை ஏற்க மறுக்கும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டும் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்பதில் உறுதியாக உள்ளனர்.

திமுக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது

மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் திமுக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது. அடக்குமுறைகள் மூலம் ஆசிரியர்களை பணிய வைத்து விடலாம் என்ற மனப்பான்மையை கைவிட்டு, இடைநிலை ஆசிரியர்களின் சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஒரே கையெழுத்து... மாறப்போகும் 12,000 ஆசிரியர்களின் வாழ்க்கை! பட்ஜெட் எதிர்பார்ப்புகள்
ஒரே கையெழுத்து... மாறப்போகும் 12,000 ஆசிரியர்களின் வாழ்க்கை! பட்ஜெட் எதிர்பார்ப்புகள்
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Morning Breakfast Scheme: ’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Skoda Mileage SUV: ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.! சோகத்தில் தியேட்டர்- இது தான் காரணமா.?
ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.! சோகத்தில் தியேட்டர்- இது தான் காரணமா.?
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
Embed widget