மேலும் அறிய

IIT Madras Scholarships: வாவ்… ஐஐடி சென்னையில் இலவசமாகப் படிக்க இத்தனை நிதியுதவிகளா? என்னென்ன உதவித்தொகைகள்? முழு விவரம்

IIT Madras Merit-cum-Means Scholarship: ஐஐடி சென்னையில், தகுதியுள்ள வசதி குறைவான மாணவர்களுக்கு ஏராளமான நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஐஐடி சென்னையில், தகுதியுள்ள வசதி குறைவான மாணவர்களுக்கு ஏராளமான நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவை குறித்துப் பார்க்கலாம். 

பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை உள்ள பிடெக் மாணவர்களுக்கு 100 சதவீத நிதியுதவியை இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றனர்.

மத்திய-மாநில அரசுகள் மாணவர்களுக்காக அளித்துவரும் கணக்கிலடங்கா நிதியுதவி மற்றும் கல்வி உதவித்தொகை ஆதரவுகளில் 'மெரிட்-கம்-மீன்ஸ்' (MCM) உதவித் தொகையும் ஒன்று. எஸ்சி/ எஸ்டி மாணவர்கள் எந்தப் பாடத்திட்டத்தில் சேர்ந்திருந்தாலும் அவர்களின் பெற்றோரின் வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எம்சிஎம் கல்வி உதவித்தொகை

இப்பிரிவின்கீழ் இந்திய அரசு அளித்துவரும் மூன்றில் இரு பங்கு கல்விக் கட்டணத் தள்ளுபடியுடன் 'எம்சிஎம்' கல்வி உதவித் தொகையும் சேர்த்து வழங்கப்படுவதால், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்/ பொதுப்பிரிவினர்/ இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த தகுதியுள்ள பிடெக்/ இரட்டைப் பட்ட மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்துவதில் முழு விலக்குப் பெறுவார்கள். இந்த ஆதரவின் மூலம் மாணவர்கள் தங்களின் பணப்பிரச்சனைகள், கல்விக் கடன்கள் பற்றிய கவலையின்றி படிப்பிலும் எதிர்காலக் கல்வியைத் தொடருவதிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியும்.

இத்தகைய நிதியுதவியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் காமகோடி, "தேவையுள்ள மாணவர்களுக்கு நிதியுதவி கிடைப்பதற்கு இயன்றவரை நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இதனை செயல்படுத்த உதவிய நன்கொடையாளர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டார்.

இந்த கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் 2022-23ம் ஆண்டில் 490 மாணவர்களுக்கு ரூ.3.26 கோடி வழங்கப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டான 2023-24ல் 495 மாணவர்களுக்கு ரூ.3.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகையான ரூ.66,667 இரண்டாகப் பிரிக்கப்பட்டு, கல்வியாண்டின் இரு செமஸ்டர்களுக்கும் சரிபாதியாக வழங்கப்படுகிறது.

கல்வி உதவித்தொகை குறித்து மாணவர்கள் கருத்து

பணபிரச்சனையால் ஏற்பட்ட அழுத்தத்தில் இருந்து விடுபட எம்சிஎம் கல்வி உதவித்தொகை எவ்வாறு உதவியது என்பது குறித்து அதனால் பயன்பெற்ற ஐஐடி மெட்ராஸ் மாணவர் அக்சித் கூறுகையில், "எனது குடும்பத்தில் முறையான பொறியியல் பட்டம் பெற்ற முதலாவது நபர் நான்தான். இதனால் என் குடும்பத்தைப் பெருமையடைந்தது. எனது குடும்பத்திற்கு எவ்வித சுமையையும் ஏற்படுத்தாமல் கல்விக் கட்டணம், விடுதிக்கட்டணத்தை செலுத்த ஐஐடி சென்னையின் கல்வி உதவித்தொகைகள் உதவுகின்றன” என்றார்.

கல்வி உதவித்தொகை சாய்ஸ்ரீ கூறும்போது, "ஐஐடி சென்னையில் என்னைச் சேர்த்தே ஆக வேண்டும் என்ற என் தந்தையின் கனவை நிறைவேற்ற முடிந்திருக்கிறது. நான் பிறப்பதற்கு முன்பே அவர் இங்குதான் பணிபுரிந்து வந்தார். தினக்கூலியாக வேலை செய்தபோது ஐஐடியைச் சுற்றிப்பார்த்த அவர், இது மிகவும் மதிப்புவாய்ந்த கல்வி நிறுவனம் என்பதைக் கண்டார்.

எனவே, என்னை இங்கே படிக்க வைத்தே தீருவது என்பது அவரது கனவாக இருந்தது. அந்தக் கனவுதான் உண்மையிலேயே ஐஐடி மெட்ராஸ்-ல் நான் நுழைவதற்கும் காரணமாக அமைந்தது.  பாடத்திட்டம், கல்விக் கட்டணம் போன்ற விவரங்களை ஐஐடி மெட்ராஸ் இணையதளத்தில் பார்வையிட்டபோது, முன்னாள் மாணவர்களின் கல்வி உதவித்தொகை வாயிலாக ஏசிஆர் அலுவலகம் கட்டண விலக்கு பெற்றுத் தருவது தெரிய வந்தது. இங்கு நான் சேர்ந்தபின், இந்த கல்வி உதவித்தொகை குறித்து இமெயில் மூலம் எனக்குத் தகவல் வந்தது” என்று தெரிவித்தார்.

என்னென்ன நிதியுதவிகள்?

ஐஐடி சென்னையில் பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல் கல்வியைத் தொடரும் சிறந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, ஃபெலோஷிப் வடிவில் நிதியுதவி வழங்கப்படுகிறது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அவரவர் கல்வித்திறன் அடிப்படையில் முன்னாள் மாணவர்களின் நிதியுதவித் தொகை கிடைக்கும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் முழு கல்விக் கட்டணத் தள்ளுபடி உண்டு.

பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.50 லட்சத்திற்கும் குறைவாக உள்ள எஸ்சி/ எஸ்டி மாணவர்கள் எம்.ஏ. பாடத்திட்டத்தில் சேரும்போது, அவர்களுக்கு இலவச மெஸ் வசதி, மாதம் ரூ.250 செலவுத்தொகை, கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக்கான வாடகை ஆகியவற்றை செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டது. மேலும், ரூ. 4.50 லட்சத்திற்கும் குறைவாக பெற்றோரின் ஆண்டு வருமானம் உள்ள எம்.ஏ. பாடத்திட்ட மாணவர்களில் 25 சதவீதம் பேருக்குத் தகுதி கல்வி உதவித்தொகையும் (Merit Scholarship) வழங்கப்பட்டது.

இதுதவிர, ஐஐடி சென்னை பிடெக் பாடத்திட்டத்தில் சிறந்த மாணவர்களுக்கு NCERT, மத்திய-மாநில அரசுகளால் அனுமதிக்கப்படும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாடு கல்வி உதவித்தொகை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரகம்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரகம் மூலம் வழங்கப்படுகிறது.

பொறியியல் பட்டதாரி திறனறித் தேர்வு (Graduate Aptitude Test in Engineering - GATE) மூலம் எம்.டெக் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு பகுதிநேர கற்பித்தல் உதவியாளர்கள் (HTTA) என்ற முறையில் மாதந்தோறும் ரூ.12,400 வழங்கப்படுகிறது. எம்.எஸ்சி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 தகுதி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது.

பொறியியல் முழுநேர பிஎச்.டி. ஆராய்ச்சிப் படிப்பில் சேர்க்கப்படும் கல்வியாளர்களுக்கு பகுதிநேர கற்பித்தல்/ஆராய்ச்சி உதவியாளர்கள் (HTRA) என்ற முறையில் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.37,000 வீதமும், அடுத்த மூன்றாண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.42,000 வீதமும் அனுமதிக்கப்படுகிறது. ஆராய்ச்சி அறிஞர்கள் சர்வதேச மாநாடுகளில் கட்டுரைகளை சமர்ப்பிக்க நிதியுதவி வழங்கி இக்கல்வி நிறுவனம் ஊக்குவிக்கிறது. எம்.எஸ், பிஎச்டி கல்வியாளர்களுக்கு பதிவுக் கட்டணம் உள்பட ரூ.1,50,000 உச்ச வரம்பாக நிதியுதவி வழங்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!மதிக்காத அதிகாரிகள்! நொந்து போன அமைச்சர்! அலறவிடும் விஜயபாஸ்கர்Amitshah vs Rahul:  ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்TR Balu Parliament Speech: ஓரே நாடு ஒரே தேர்தல்..”சாத்தியமில்ல மோடி!”பாய்ண்டாக பேசிய டி.ஆர். பாலு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
Breaking News LIVE 18th DEC 2024: காங்கிரஸ் கட்சியே அம்பேத்கருக்கு எதிரானது - பிரதமர் மோடி
Breaking News LIVE 18th DEC 2024: காங்கிரஸ் கட்சியே அம்பேத்கருக்கு எதிரானது - பிரதமர் மோடி
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Embed widget