தொடர் விடுமுறை; நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு லீவ்! கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
புதுச்சேரி நாளை (03-10-2025) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை - புதுச்சேரி அரசு அறிவிப்பு

புதுச்சேரியில் நாளை (03-10-2025) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் நமச்சிவாய அறிவிப்பு.
புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி, காரைக்கால் மாஹே, யானம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை (03-10-2025) விடுமுறை அளிக்கப்படுகிறது என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் நாளை (அக்டோபர் 3, 2025) விடுமுறை வழங்கப்படுகிறது. இவ்விடுமுறையால் வகுப்புகள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு முக்கிய குறிப்பு
இந்த விடுமுறை அரசு கல்வி நிறுவனங்களை மட்டுமின்றி, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்பதால், புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புற பிராந்தியங்களில் உள்ள அனைத்து மாணவர்களும் நாளை வகுப்புகளின்றி ஓய்வு நாளைக் கடைப்பிடிக்கலாம்.





















