மேலும் அறிய

வந்தது அறிவிப்பு; தீபாவளியை கொண்டாட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை- தமிழக அரசு!

தீபாவளிக்கு முந்தைய நாளான நாளை (அக்.30) அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

தீபாவளி பண்டிகையை ஒட்டி, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு நாளை (அக்.30) அரை நாள் விடுமுறை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தீபாவளி திருநாள் (Deepavali, Diwali) என்பது பொதுவாக ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற ஒரு பண்டிகையாகும். வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி கருதப்படுகிறது.  இது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் பௌத்த மதங்களிடையே மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நவம்பர் 1 விடுமுறை

தீபாவளி வியாழக்கிழமை அன்று வருவதால், அடுத்த நாளான வெள்ளி அன்று அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்களும் மாணவர்களும் கோரிக்கை விடுத்தனர். சொந்த ஊர்களுக்குச் சென்று வர ஏதுவாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்து இருந்தனர். இதை அடுத்து, தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து இருந்தது.

வந்தது அறிவிப்பு; தீபாவளியை கொண்டாட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை- தமிழக அரசு!

இந்த நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாளான நாளை அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’’தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை முற்பகல் மட்டும் செயல்படும். பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நான்கரை நாட்களுக்குத் தொடர் விடுமுறை

இதன் மூலம் தீபாவளிக்கு முந்தைய நாளாக அக்டோபர் 30 புதன் பிற்பகல், தீபாவளி நாளான அக்டோபர் 31 வியாழக்கிழமை, நவம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை, அடுத்த நாளான சனிக்கிழமை, வார விடுமுறை ஞாயிற்றுக் கிழமை ஆகிய நான்கரை நாட்களுக்குத் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் அரசு ஊழியர்களும் மாணவர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். 

எனினும் நாளை கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget