மேலும் அறிய

புதுச்சேரியில் உயர்கல்வி மாணவர்களுக்கு குட் நியூஸ்! 100% கட்டண விலக்கு: ஆளுநர் அதிரடி உத்தரவு

புதுச்சேரியில் அனைத்து உயர்கல்விக்கும் 100 சதவீதம் கட்டணத்துக்கு விலக்கு அளித்து ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல்.

புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து உயர்கல்விக்கும் 100 சதவீதம் கட்டணத்துக்கு விலக்கு அளித்து ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

அனைத்து உயர்கல்விக்கும் 100 சதவீதம் கட்டணத்துக்கு விலக்கு

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்., 

புதுச்சேரி அரசு கல்லூரிகளில் படிக்கும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயனடைவார்கள் கல்வி உதவித்தொகை புதுச்சேரி அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம், என்ஜினீயரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு காமராஜர் கல்வி நிதியுதவி திட்டத்தின் கீழ் அரசால் கல்விஉதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து உயர்கல்விக்கும் அரசு ஒதுக்கீட்டில் தேர்வுசெய்யப்படும் மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி அளிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்று அனைத்து உயர்கல்விக்கும் விலக்கு அளிக்கப்படும் என  சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். ஆனால் இதற்கான அரசாணை வெளியிடப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது இதற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை செயலாளர் கிருஷ்ணன் மோகன் உப்பு பிறப்பித்துள்ள உத்தரவில், அரசின் கொள்கை முடிவு உயர்கல்வி படிப்பதை ஊக்குவிக்கவும், நிதி நெருக்கடி தடையாக இருப்பதை தவிர்க்கும் வகையிலும் அனைத்துமாணவர்களுக்கும் 100 சதவீதம் கல்வி கட்டண விலக்குஅளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

புதுச்சேரி அரசு, சமூக கல்லுாரியில் அரசு ஒதுக்கீடு இடங்களில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இது பொருந்தும். 2024-25ம் கல்வி ஆண்டுமுதல் இந்த கல்வித்தொகை வழங்கப்படும். அரசின் இந்த கொள்கைமுடிவு, அனைத்து தொழில்முறை, பிற கல்வி நிறுவனங்களுக்கான நிர்வாக துறைகளுக்கும் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள், அந்தந்த நிறுவனங்களின் நிதி சார்பு விவரங்களைப்பெற்று, மானிய உதவிக்கான அவர்களின் கணக்குத்தலைப் தேவையான ஏற்பாடுகளைச் செய்து, அதற்கேற்ப நிதியை விடுவிப்பதற்கு தகுதி வாய்ந்த அதிகாரிகளின் ஒப்புதலை பெற வேண்டும்.

அரசாணை புதுவை லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லூரிக்கு, 2022-23 கல்விண்டு முதல் புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காமராஜர் பொறியியல் கல்லுாரிகளுக்கு இணையாக கல்வி கட்டண விலக்கு அளிக்கப்படும். ஆளுநர் உத்தரவின் பேரில் இதற்கான அரசாணை வெளியிடப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரி அரசு கல்லூரிகளில் படிக்கும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயனடைவார்கள்.

இதுகுறித்து கல்வியாளர் வை பாலா கூறுகையில்,

புதுச்சேரி முதலமைச்சரும் துணைநிலை ஆளுநரும் இந்த ஒப்புதல் வழங்கியதற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் 33 சட்டமன்ற உறுப்பினர்களால் புதுச்சேரி சட்டமன்றம் இயங்கி வருகிறது. எனவே இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தான் நடக்க வேண்டும். தவிர அதிகாரிகள் ஆட்சியில் நடக்கக் கூடாது. எனவே முதல்வர் ரங்கசாமி அவர்களும் துணைநிலை ஆளுநர் கைலாசநாதர் அவர்களும் இந்த ஒப்புதல் வழங்கிய ஆணைக்கு அதிகாரிகள் உடனடியாக உயிர் கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இதனால் ஏழை எளிய மாணவர்கள் மாணவிகள் பயன்பெறுவார்கள் என தெரிவித்துக் கொள்கிறேன். 

அனைத்து உயர்கல்விக்கும் 100 சதவீதம் கட்டணத்துக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டது தற்போது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் மாணவர்களின் கல்வி தடைபடாமல் படிக்க உதவும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தலைப்பு செய்திகள்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget