மேலும் அறிய

Free Pass: மாணவர்களுக்கு இலவச ரயில் பயண அட்டை: ராமதாஸ் வலியுறுத்தல்! அரசு நடவடிக்கை எடுக்குமா?

Free rail travel pass: ரயிலில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் அரசு ரயில்வே துறையில் 12 மாதங்களுக்கு உண்டான பணம் செலுத்தி, இரயிலில் பயணிக்க இலவச பயண அட்டையை பெற்றுத்தர வேண்டும்- ராமதாஸ்.

ரயிலில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச இரயில் பயண அட்டையை மாநில அரசு பெற்றுத்தர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’தமிழ்நாட்டில் படிக்கும் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டம் 1999-ல் தொடங்கப்பட்டது. பின்னர் வந்த ஆட்சியாளர்களால் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதன்படி அரசு பள்ளி, அரசுநிதி உதவிபெறும் பள்ளி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி,  அரசு தொழிற்பயிற்சி மாணவர்கள் தங்களது கல்வி நிறுவனத்தின் மூலம் வழங்கப்பெற்ற இலவச பேருந்து பயண அட்டையை பேருந்து நடத்துனரிடம் காண்பித்து கட்டணமின்றி இத்திட்டத்தின் மூலம் பயணிக்கலாம்.

பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து

இதற்காக ஆண்டொன்றிற்கு சுமார் 600 கோடி ரூபாய் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு அரசால் வழங்கப்படுகிறது. ஆனாலும் பேருந்துகள் குறிப்பிட்ட நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்வதும் சற்று தள்ளி நிறுத்துவதும் தொடர்ந்து வாடிக்கையாகி வருகிறது. இதனை தவிர்க்க மகளிர் பேருந்து போல பள்ளி தொடங்கும் நேரத்திற்கு முன்பாகவும் பள்ளி முடியும் நேரத்திற்கும் பின்பும் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பேருந்தை இயக்க வேண்டும்.

இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் கல்வி நிறுவனத்தின் மூலம் விண்ணப்பங்கள் பெறாமல் எமிஸ் EMIS (பள்ளி கல்வித் துறையின் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு இணையதள பதிவிலிருக்கும்) எல்லா மாணவர்களுக்கும் பேருந்து இலவச பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது.


Free Pass: மாணவர்களுக்கு இலவச ரயில் பயண அட்டை: ராமதாஸ் வலியுறுத்தல்! அரசு நடவடிக்கை எடுக்குமா?

60 லட்சம் பேருக்கு இலவச பேருந்து பயண அட்டை

இதன் மூலம் தமிழகம் முழுவதும் அறுபது லட்சம் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழகப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து துறை கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே ரயில் நிலையங்களுக்கு அருகாமையில் வசிக்கும் மாணவர்கள் இரயிலில் பள்ளிக்கு பயணிக்கிறார்கள். அவர்களுக்கு மாணவர்களின் பெற்றோர்கள் மாதாந்திர பயண அட்டையை தங்கள் சொந்த செலவில் பெற்றுத் தருகிறார்கள். வரும் கல்வி ஆண்டில் இரயிலில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் அரசு இரயில்வே துறையில் 12 மாதங்களுக்கு உண்டான பணம் செலுத்தி, இரயிலில் பயணிக்க இலவச பயண அட்டையை பெற்றுத்தர வேண்டும்’’ என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Embed widget