மேலும் அறிய

பிளிப்கார்ட் முதல் சொமாட்டோ வரை: உலகை ஆளும் ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர்கள்!

ஐஐடி டெல்லியின் 65,000-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், தொழில் துறை, அரசு நிர்வாகம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.

ஐஐடி டெல்லி அண்மையில் தனது 68-வது நிறுவன நாளைக் கொண்டாடியது. இதையொட்டி வெளியிடப்பட்ட ‘முன்னாள் மாணவர்கள் தாக்க அறிக்கை’ (Alumni Impact Report 2026), அந்த நிறுவனம் உருவாக்கிய ஆளுமைகள் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் எத்தகைய ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

ஐஐடி டெல்லியின் 65,000-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், தொழில் துறை, அரசு நிர்வாகம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக முக்கியப் பங்காற்றி வருகின்றனர். இவர்களின் ஒட்டுமொத்தப் பங்களிப்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியத் தூணாக உள்ளது.

தொழில்முனைவோர்களின் கூடாரம்

ஐஐடி டெல்லியில் படித்த மாணவர்கள் உருவாக்கிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் கோடி ஆகும். பிளிப்கார்ட் நிறுவனர்கள் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால், சொமாட்டோ சிஇஓ தீபேந்தர் கோயல் ஆகியோர் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களே. இவர்கள் உருவாக்கிய நிறுவனங்கள் மூலம் சுமார் 4.8 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சுமார் 10,000 முன்னாள் மாணவர்கள் உலகின் முன்னணி நிறுவனங்களில் தலைமைப் பதவிகளில் உள்ளனர்.

அரசு நிர்வாகத்தில் ஆளுமை

வியாபாரம் மட்டுமல்லாது, பொது மக்கள் சேவைகளிலும் ஐஐடி டெல்லி மாணவர்கள் முத்திரை பதித்துள்ளனர்.

  • 270-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள்.
  • 100-க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகள்.
  • மொத்தமாக 650-க்கும் மேற்பட்டோர் அரசு உயர் பதவிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தலைவர்களாகப் பணியாற்றுகின்றனர்.

கல்வித் துறையிலும் டாப்

உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் முக்கியப் பொறுப்பிலும், இந்தியாவின் பல்வேறு ஐஐடி-க்களில் 300-க்கும் மேற்பட்டோர் பேராசிரியர்களாகவும் உள்ளனர். கல்லூரி வளர்ச்சிக்காக முன்னாள் மாணவர்கள் உருவாக்கிய மையத்தின் மூலம் இதுவரை ரூ.477 கோடி நன்கொடையாகத் திரட்டப்பட்டு, கல்லூரி வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து ஐஐடி டெல்லி இயக்குனர் பேராசிரியர் ரங்கன் பானர்ஜி கூறுகையில், "எங்கள் மாணவர்கள் இன்று உலகளாவிய தலைவர்களாகவும், முன்னோடி தொழில்முனைவோராகவும் உயர்ந்து, சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்" என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இத்தகைய செய்திகள், ஒவ்வொரு மாணவரும் தாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய கல்லூரியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

பி.ஆர்க். (B.Arch) படிப்பிற்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு - முழு விவரம் உள்ளே!
பி.ஆர்க். (B.Arch) படிப்பிற்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு - முழு விவரம் உள்ளே!
டெட் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு, மதிப்பெண்களில் தளர்வு: ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள்
டெட் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு, மதிப்பெண்களில் தளர்வு: ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!

வீடியோ

கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலஜ்! Ather 450 S இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலஜ்! Ather 450 S இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை, தரம் எப்படி?
ரூ.2000 நோட்டு வச்சிகிட்டு தவிக்கிறீங்களா? .. உடனே மாற்ற சூப்பர் வாய்ப்பு.. ரிசர்வ் வங்கி கொடுத்த ஐடியா!
ரூ.2000 நோட்டு வச்சிகிட்டு தவிக்கிறீங்களா? .. உடனே மாற்ற சூப்பர் வாய்ப்பு.. ரிசர்வ் வங்கி கொடுத்த ஐடியா!
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
Embed widget