மேலும் அறிய

பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகளுக்கு செப்டம்பர் 22-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியீடு

பகுதிநேர பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 22-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின் சார்பில் கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி, சேலம், பர்கூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரிகள், காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரி, கோவையில் உள்ள கோவை தொழில்நுட்ப கல்லூரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் பகுதிநேர பி.இ., பி.டெக் பட்டப்படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

மேற்கண்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டிற்கு பகுதி நேர முதலாமாண்டு பி.இ., பி.டெக். பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் பணி கடந்த 6-ந் தேதி முதல் தொடங்கியது. மாணவர்கள் இணையதளம் வாயிலாக தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகின்றனர்.

பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகளுக்கு செப்டம்பர் 22-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியீடு

விண்ணப்பங்களை வரும் செப்டம்பர் 5-ந் தேதி மாலை 5 மணி வரை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளன்று, டிப்ளமோ படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் முழுமை பெற்றிருக்க வேண்டும். மேலும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிகிறவராகவோ அல்லது இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தவராகவோ இருக்க வேண்டும் என்று தகுதியாக வைக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பிப்பவர்கள் பதிவுக்கட்டணத்தை இணையதளம் வாயிலாக செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கோவை தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வரும், பகுதி நேர பி.இ., பி.டெக் மாணவர் சேர்க்கை செயலாளருமான ராஜேஸ்வரி கூறியதாவது, “பகுதிநேர பி.இ., பி.டெக் முதலாமாண்டு படிப்பிற்கு இதுவரை 800-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் மூலமாக விண்ணப்ப படிவங்களை பதிவு செய்யலாம். இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இணைய வழியிலே நடைபெற உள்ளது.

பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகளுக்கு செப்டம்பர் 22-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியீடு

மாணவர் சேர்க்கை, விண்ணப்ப கட்டணம், முக்கிய தேதிகள் உள்ளிட்ட விவரங்களை www.ptbe-tnea.com என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 22-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். தகுதியான மாணவர்கள் வரும் 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை கலந்தாய்வுக்கான சிறப்பு கட்டணத்தை செலுத்தலாம். சிறப்பு பிரிவினருக்கு வரும் செப்டம்பர் 26-ந் தேதியும், பொதுப்பிரிவினருக்கு 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும். செப்டம்பர் 30-ந் தேதி சேர்க்கைக்கான கடிதம் வழங்கப்படும். மாணவர் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு 94869 77757, 0422-2574071, 2574072 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.”  இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Government School Student Innovation: அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
Salem Suitcase Murder: சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்...  விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
Chennai Rain: சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
Embed widget