DRDO Recruitment 2021: DRDO-ல் 38 காலி பணியிடங்கள்: ஆக.29க்குள் விண்ணப்பித்து வேலை பெறுங்கள்!
38 காலி இடங்கள் இருக்கும் இந்த வேலைக்கு விண்ணப்பங்கள் இப்போது பெறப்படுகின்றது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க ஆகஸ்டு 29 கடைசி நாள்.
![DRDO Recruitment 2021: DRDO-ல் 38 காலி பணியிடங்கள்: ஆக.29க்குள் விண்ணப்பித்து வேலை பெறுங்கள்! DRDO Recruitment 2021 vacancies for ITI candidates, last date to apply, eligibility know in detail DRDO Recruitment 2021: DRDO-ல் 38 காலி பணியிடங்கள்: ஆக.29க்குள் விண்ணப்பித்து வேலை பெறுங்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/11/b5a35b6f0aa8ec7c605ad0ea93b57e2d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டெல்லி திருமர்பூரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (DRDO) மையத்தில் 2020-21 ஆம் ஆண்டுக்கான் ஐடிஐ பயிற்சிக்கான விண்ணப்பங்கள் பெற்று கொள்ளப்படுகின்றது. இதில் சேர விருப்புள்ளமவர்கள், DRDO-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
38 காலி இடங்கள் இருக்கும் இந்த வேலைக்கு விண்ணப்பங்கள் இப்போது பெறப்படுகின்றது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க ஆகஸ்டு 29 கடைசி நாள். ஐடிஐ COPA படிப்பு படிப்புக்கு மாதம் 7,700 ரூபாயும், மற்ற பிரிவுகளுக்கு மாதம் 8,050 ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோவில் வேலை; எழுத்துத் தேர்வே இல்ல.. உடனே அப்ளை பண்ணுங்க..! டீடெய்ல்ஸ் இங்கே
மெஷின் மோட்டார் வாகனம் (எம்எம்வி) - 3, டிராப்ட்ஸ்மேன் (சிவில்) - 4, எலக்ட்ரானிக் மெஷின் - 5 இன்ஸ்ட்ரூமென்ட் மெஷின் மெகாட்ரானிக்- 6, ஆய்வக உதவியாளர் (ரசாயன ஆலை) - 6 மற்றும் கணினி இயக்க மற்றும் நிரலாக்க உதவியாளர் -14
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது பற்றிய முழு விவரம்:
விண்ணப்பதாரரின் வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தது 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக பட்டியலிடப்படாத பிரிவினரைச் சேர்ந்தவர்களுக்கு 27 வயதும், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30 வயதும், பட்டியலிடப்பட்ட பிரிவினருக்கு 32 வயதும், பி.இ.டி பிரிவிவருக்கு 37 வயதும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பாங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை; டிகிரி முடிச்சிருந்தா போதும்.. ஆகஸ்ட் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
விண்ணப்பதாரர் கல்வித் தகுதி: திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் NCVT யால் முறையாக அங்கீகரிக்கப்பட்ட ஐடிஐயில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கு முறை:
- அதிகாரப்பூர்வ இணையதளத்தில் rac.gov.in , முகப்பு பக்கத்தில் உள்ள ’CFEES, Delhi invites applications from eligible candidates for apprenticeship training' என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்
- விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்
- தாங்கள் பதிவு செய்யும் விவரங்களுக்கு ஆதாரமாக உரிய ஆவணங்களையும் தங்களது கணக்குகளில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
- விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
- சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை உங்கள் தேவைக்காக பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)