மேலும் அறிய

திராவிட மாடல்‌ அரசிடம்‌ ஆசிரியர்‌களை நியமிக்கப்‌ பணமில்லையா? சீமான் கேள்வி

அரசுப் பள்ளிகளில்‌ உடற்கல்வி ஆசிரியா்‌ பணியிடங்களைக்‌ குறைக்கும்‌ வகையில் திமுக அரசு புதிய அரசாணை வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது- சீமான்

250 கோடிகள்‌ செலவழித்து ஆடம்பர கார்‌ பந்தயம்‌ நடத்தும்‌ திராவிட மாடல்‌ அரசிடம்‌, 250 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர்‌ நியமிக்கப்‌ பணமில்லையா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பள்ளிக் கல்வித்துறையின்‌ சார்பாகக்‌ கடந்த ஜூலை 1ஆம்‌ நாள்‌ வெளியிட்ட புதிய அரசாணை 150-ன்படி, தமிழ்நாட்டிலுள்ள அரசுப்‌ பள்ளிகளில்‌ 250 மாணவர்களுக்கு ஓர்‌ உடற்கல்வி ஆசிரியா்‌ என்றிருந்த நிலையை மாற்றி, இனி 700 மாணவர்கள்‌ படிக்கும்‌ பள்ளிக்கு ஓர்‌ உடற்கல்வி ஆசிரியா்‌ என திமுக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அரசுப்பள்ளியில்‌ பயிலும்‌ லட்சக்கணக்கான ஏழை மாணவர்களின்‌ உடற்திறன்‌ மேம்பாட்டைச்‌ சீர்குலைக்கும்‌ திமுக அரசின்‌ இந்நடவடிக்கை எதேச்சதிகாரப் போக்கின்‌ உச்சமாகும்‌.

ஏற்கெனவே நடைமுறையிலிருந்த 1997ஆம்‌ ஆண்டு அரசாணை 525இன்படி 6ம்‌ வகுப்பு முதல்‌ 10ம்‌ வகுப்பு வரையுள்ள வகுப்புகளில்‌ மாணவர்கள்‌ எண்ணிக்கை 250க்கு அதிகமாகும்போது ஓர்‌ உடற்கல்வி ஆசிரியா்‌ பணியிடமும்‌, பின்னர் கூடுதலாக உள்ள ஒவ்வொரு 300 மாணவர்கள்‌எண்ணிக்கைக்கும்‌ கூடுதலாக ஓர்‌ உடற்கல்வி ஆசிரியா்‌ பணியிடமும்‌ என ஒரு பள்ளிக்கு 3 உடற்கல்வி ஆசிரியா்‌ பணியிடங்களுக்கு மிகாமல்‌ அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 11 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்புகளில்‌ மாணவர்கள்‌ எண்ணிக்கை 400க்கும்‌ அதிகமாகும்போது, அந்தப்‌ பள்ளியில்‌ அனுமதிக்கப்பட்டுள்ள உடற்கல்வி ஆசிரியா்‌ பணியிடத்துக்குப்‌ பதிலாக, ஓர்‌உடற்கல்வி இயக்குநராகப் பணியிடமாகத்‌ தரம்‌ உயர்த்திடவும்‌ அனுமதிக்கப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில்‌ 250 மாணவர்களுக்கு ஓர்‌ உடற்கல்வி ஆசிரியா்‌ என்று இருந்த நிலையிலேயே, மாணவர்களுக்கு முழுமையான உடற்திறன்‌ பயிற்சி அளிக்க முடியாத நிலையில்‌, தற்போது 700 மாணவர்களுக்கு ஓர்‌ உடற்கல்வி ஆசிரியா்‌ என்று மாற்றுவது எவ்வகையில்‌ நியாயமாகும்‌?

ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிப்பு

அதிலும்‌, தற்காலத்தில்‌ அலைபேசி மற்றும்‌ கணினி உள்ளிட்ட நவீன அறிவியல்‌ சாதனங்களில்‌ மூழ்கிக்‌ கிடக்கும்‌ மாணவ சமுதாயத்தின்‌ மன அழுத்தத்தைக்‌ குறைக்கவும்‌, உடல்‌ நலத்தைப்‌ பேணவும்‌ உடற்பயிற்சி என்பது இன்றியமையாத தேவையாக உள்ள நிலையில்‌, உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை அதிகரிப்பதற்குப்‌ பதிலாக, குறைப்பதென்பது தமிழ்நாடு அரசின்‌ மிகத்தவறான நிர்வாக முடிவாகும்‌.

இப்படி ஏழை மாணவர்களுக்கான கற்பிக்கும்‌ ஆசிரியா்‌ பணியிடங்களைக்‌குறைத்துதான்‌ அரசு தன்னுடைய நிதிநிலையைச்‌ சீர்‌ செய்ய வேண்டுமா?

கள்ளச்சாராயம்‌ குடித்து இறந்தவர்களுக்கு 10 இலட்சம்‌ கொடுக்க நிதி இருக்கும்‌ திமுக அரசிடம்‌, படிக்கும்‌ மாணவர்களுக்கு உடற்கல்வி அளிக்கும்‌ ஆசிரியா்களுக்குச்‌ சம்பளம்‌ கொடுக்கப்‌ பணமில்லையா? மாணவர்களுக்கு மாதம்‌ 1000 ரூபாய்‌ பணத்தைக்‌ கொடுத்துவிட்டு, கற்பிக்கும்‌ ஆசிரியரைக்‌ குறைத்து அவர்களின்‌ கல்வியை நிறுத்துவதற்குப்‌ பெயர்தான்‌ திராவிட மாடலா?

250 கோடிகளை வாரியிறைத்து கார்‌ பந்தயம்‌ நடத்தப்‌ பணம்‌ இருக்கும்‌ அரசிடம்‌ 250 மாணவர்களுக்கு ஓர்‌ உடற்கல்வி ஆசிரியா்‌ நியமிக்கப்‌ பணமில்லை என்பது வெட்கக்கேடு இல்லையா? இதுதான்‌ தமிழ்நாட்டில்‌ விளையாட்டுத் துறையை உலகத்தரத்திற்கு வளர்த்திடும்‌ முறையா? கார்‌ பந்தயத்தில்‌ எத்தனை தமிழர்கள்‌ இடம்பெற்று இருந்தனர்? எத்தனை ஏழைக்குழந்தைகள்‌ அதனால்‌ பயன்பெற்றனர்?

ஒலிம்பிக்‌ பதக்கம் கிடைக்குமா?

ஒரே ஒரு ஒலிம்பிக்‌ பதக்கத்தையாவது இந்த ஆடம்பர கார்‌ பந்தயத்தால்‌ வாங்கித்‌ தர இயலுமா? கார்‌ பந்தயத்தால்‌ அந்நிய முதலீடுகள்‌ குவியுமென்றால்‌, அந்நிய முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்ல வேண்டிய அவசியம்‌ என்ன?

உடற்கல்வி ஆசிரியாகளுக்கு சம்பளம்‌ கொடுக்கப்‌ பணமில்லாமல்‌ஆட்குறைப்பு செய்கின்ற அவலநிலையின்‌ மூலம்‌, மூன்றாண்டு திராவிட மாடல்‌ ஆட்சியில்‌ பல்லாயிரம்‌ கோடிகள்‌ அந்நிய முதலீடுகளைக்‌ குவித்து, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி விட்டோம்‌ என்று திராவிட மாடல்‌ ஆட்சியாளர்கள்‌ மாரதட்டுவது அனைத்தும்‌ பச்சைப்பொய்‌ என்பது உறுதியாகிறது.

அரசுப்பள்ளியில்‌ மாணவர்களின்‌ எண்ணிக்கை குறைவது என்பது அரசின்‌ நிர்வாகத்‌ திறமையின்மையாலும்‌, தரமான கல்வியை வழங்கத்‌ தவறியதாலும் நிகழும்‌ கொடுமையாகும்‌. அதனைச்‌ சரி செய்து அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்‌ சோக்கையை அதிகப்படுத்த எவ்வித முயற்சியும்‌ எடுக்காமல்‌, அதனையே காரணம்‌ காட்டி ஆசிரியா்‌ பணியிடங்களைக்‌ குறைப்பதென்பது அரசின்‌ அறிவார்ந்த‌ செயல்‌ ஆகாது’’.

இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
Embed widget