மேலும் அறிய

Graduate Teachers Recruitment: ரூ.1.15 லட்சம் வரை ஊதியம்; 2,222 பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்- எப்படி விண்ணப்பிப்பது?

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு இன்று (நவம்பர் 1) முதல் தொடங்கியுள்ள நிலையில், 30ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு இன்று (நவம்பர் 1) முதல் தொடங்கியுள்ள நிலையில், 30ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம். எனினும் ஆசிரியர் தகுதித் தேர்வு 2ஆம் தாளில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய கருத்தாளர் (GRADUATE TEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS - BRTE) ஆகிய பணிகளுக்கு 2,222 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்காக ஜனவரி மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ள போட்டித் தேர்வுக்கு நவம்பர் 1 முதல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலமாக மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியும். 

என்ன தகுதி?

இத்தேர்வை எழுத ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு மற்றும் பி.எட். படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில்( Tamil Nadu Teacher Eligibility Test Certificate- TNTET Paper – II) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

பணியிடங்கள்

* தமிழ் பாடம் -  371 பணியிடங்கள், 
* ஆங்கிலப் பாடம் - 214 பணியிடங்கள், 
* கணிதப் பாடம் - 200 பணியிடங்கள், 
* இயற்பியல் பாடம் - 274 பணியிடங்கள், 
* வேதியியல் பாடம் - 273 பணியிடங்கள், 
* வரலாறு பாடம் - 346 பணியிடங்கள் உள்ளிட்ட 2,222 பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஊதியம் எவ்வளவு?

36,400 ரூபாய் முதல் 1,15,700 ரூபாய் வரை. 

எந்தெந்தப் பள்ளிகளில் என்னென்ன காலி இடங்கள்?

* பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம்- 2171
* மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரகம்- 23
* ஆதிதிராவிடர் நலத்துறை - 16
* மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - 12

வயது வரம்பு

பொதுப் பிரிவு தேர்வர்களுக்கு அதிகபட்சம் 53 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை

1. கட்டாய தமிழ் மொழித் தேர்வு

தேர்வர்கள் கட்டாய தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். 

2. பாடங்களுக்கான எழுத்துத் தேர்வு

150 கேள்விகளுக்கு 3 மணி நேரம் தேர்வு நடைபெறும்.

3. சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் முன்பதிவுக்கு முன்னர், https://trb1.ucanapply.com/register?sub_id=eyJpdiI6IlFva2IxUEN3R2F2YSsxL21tR203dGc9PSIsInZhbHVlIjoidmIxaEZqbVNWQ3dGQ2FhZnI0Q0ExUT09IiwibWFjIjoiMjZjYmM4N2RhYzY4NTkzZTVkNjgwMGQwZDhmNzk1N2Q5YzU1OTcyYzQ1MDVhNmI5ZTQ4MzlkYTc0YTQyZTA3ZCIsInRhZyI6IiJ9 என்ற இணைப்பை க்ளிக் செய்து, ஆசிரியர் தகுதித் தேர்வு 2ஆம் தாள் பதிவு எண்ணை உள்ளிட வேண்டும்.

அதையடுத்து https://trb1.ucanapply.com/login என்ற இணைப்பை க்ளிக் செய்து, லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட வேண்டும். 

தொடர்ந்து போதிய தகவல்களை உள்ளிட்டு, விண்ணப்பிக்க வேண்டும்.

முழுமையான விவரங்களைப் பெற: https://www.trb.tn.gov.in/admin/pdf/2603611744BT%20FINAL_25.10.2023.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

கூடுதல் விவரங்களுக்கு: https://www.trb.tn.gov.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget