CUET UG 2025: மாணவர்களே! க்யூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி!
CUET UG 2025: இளநிலை படிப்புகளுக்கான பொதுநுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் பற்றி காணலாம்.

பல்கலைக்கழங்களில் கல்வி பயில் நடத்தப்படும் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்விற்கு (CUET UG) விண்ணப்பிக்க நாளை(22.03.2025) இறுதி நாளாகும். அதற்குள் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தவறவிட வேண்டாம்.
பல்கலைகழக பொது நுழைவுத் தேர்வு:
மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக பொது நுழைவுத் தேர்வு (Common University Entrance Test) 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டது. என்.சி.இ.ஆர்.டி. 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அடுத்த கல்வியாண்டில் (2025-26) இளநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு வரும் மே 8-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
க்யூட் நுழைவுத் தேர்வு எப்போது?
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வு கணினி வழியில் மே மாதம் 8-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக என்.டி.ஏ. அறிவித்துள்ளது.
தமிழ், ஆங்கிலம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு, இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம் மற்றும் உருது ஆகிய க்யூட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும்.
க்யூட் தேர்வு புதிய மாற்றங்கள்:
இந்தாண்டு க்யூட் நுழைவுத் தேர்வு விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மாணவர்கள் 12-ம் வகுப்பில் எந்த பாடம் படித்திருந்தாலும், விரும்பிய பாடத்தில் தேர்வு எழுதலாம். ஒரு மாணவர் அதிகபட்சமாக 5 பாடங்கள் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. க்யூட் தேர்வு கணினி மூலம் (Computer-Based Test (CBT) மட்டுமே நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
பொது நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cuet.nta.nic.in/ - என்ற இணையதள லிங்கை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
- https://cuet.nta.nic.in/ - என்ற இணையதள லிங்கை க்ளிக் செய்யவும்.
- “Register” என்பதை க்ளிக் செய்யவும்.
- CUET UG Login Id க்ரியேட் செய்யவும்.
- பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட சுயவிவர குறிப்புகளுடன் உயர்கல்வி படிப்பு பற்றிய விவரங்ககள், புகைப்படங்கள் ஆகியவற்றை பதிவு செய்யவும்.
- என்.டி.ஏ. கொடுக்கப்பட்ட அளவுகளில் சான்றிதழ் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- விண்ணப்ப கட்டணம் செலுத்தினால் விண்ணப்ப பதிவு முடிந்துவிடும்.
விண்ணப்ப கட்டணம்:

மாணவர்கள் கிரெடிட் / டெபிட் கார்டு, ஆன்லைன் பேங்கிங், UPI மூலம் மார்ச் 23-ஆம் தேதி நள்ளிரவு 11.50 மணி வரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொடர்ந்து விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள மார்ச் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மட்டும் லிங்க் செயல்படும்.
க்யூட் தேர்விற்கு விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமங்கள் அல்லது சந்தேகம் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது cuet-ug@nta.ac.in - என்ற மின்னஞ்சல் ஆகியவற்றை பயன்படுத்தில் தொடர்பு கொள்ளலாம்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய https://cuet.nta.nic.in/information-bulletin/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.03.2025




















