CUET UG 2023: க்யூட் இளங்கலைத் தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு; என்டிஏ அறிவிப்பு
மத்தியக் கல்வி நிறுவனங்களில் உள்ள இளங்கலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் தேர்வுக்கு மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று என்டிஏ அறிவித்துள்ளது.
மத்தியக் கல்வி நிறுவனங்களில் உள்ள இளங்கலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் தேர்வுக்கு மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று என்டிஏ அறிவித்துள்ளது. இதன்படி ஏப்ரல் 9 முதல் 11ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
க்யூட் நுழைவுத்தேர்வு
மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்.சி.இ.ஆர்.டி. 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கான அறிவிப்பு அண்மையில் யு.ஜி.சி. சார்பில் வெளியிடப்பட்டது.
13 மொழிகளில் தேர்வு
இளநிலை படிப்புக்கான தேர்வு முடிவுகளை ஜூன் 3 ஆம் வாரமும், முதுநிலை படிப்புக்கான தேர்வு முடிவுகளை ஜூலையிலும் வெளியிட்டு, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வகுப்புகளை தொடங்க யுஜிசி திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு
இளங்களை பட்டப்படிப்புகளுக்கான கியூட் தேர்வுக்கு பிப்ரவரி மாதம் முதல் விண்ணப்பம் தொடங்கப்பட்டது. விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 12ஆம் தேதி எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்பு மார்ச் 30ஆம் தேதி அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க, மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று என்டிஏ அறிவித்துள்ளது. இதன்படி ஏப்ரல் 9 முதல் 11ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க https://cuet.samarth.ac.in/ என்ற இணையதளத்தை மாணவர்கள் தொடர்பு கொள்ளவும்.
விண்ணப்பிப்பது எப்படி?
- முதலில் https://cuet.samarth.ac.in/என்ற இணையத்தை கிளிக் செய்யவும்.
- முகப்பு பக்கத்தில் தோன்றும் CUET UG 2023 என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.
- அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை நிரப்ப வேண்டும்.
- பின்னர், விண்ணப்பத்தை நிரப்பியவுடன் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
- பொது/ஓபிசி பிரிவினருக்கான கட்டணம் ரூ.700 மற்றும் மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமானது ரூ.650 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.