மேலும் அறிய

CTET Result 2023: சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு; பார்ப்பது எப்படி?

சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு முடிவுகள் இன்று ( செப்.25) வெளியாகி உள்ளன.

சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு முடிவுகள் இன்று ( செப்.25) வெளியாகி உள்ளன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ள தேர்வு முடிவைப் பார்ப்பது எப்படி என்று  காணலாம். 

அரசு கொண்டு வந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (CENTRAL TEACHER ELIGIBILITY TEST - CTET) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். 

அதேபோல மத்திய அரசுப் பணிகளுக்கு சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் பேனா - காகித முறையில்  நடைபெறும் தேர்வை சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்துகிறது.

2023ஆம் ஆண்டுக்கான தேர்வு நேரடி முறையில் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 29 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்தனர். குறிப்பாக 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான வகுப்பு ஆசிரியர் பணிக்கு நடத்தப்படும் முதல் தாளை எழுத 15,01,719 பேர் விண்ணப்பித்தனர். அதேபோல 6 முதல் 8ஆம் 
வகுப்பு வரையிலான வகுப்பு ஆசிரியர் பணிக்கு நடத்தப்படும் இரண்டாம் தாளை எழுத 14,02,184 பேர் விண்ணப்பித்தனர். 

இதற்குத் தேர்வர்கள் ஏப்ரல் 27ஆம் தேதி முதல் மே 26ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். இதில் பொதுப் பிரிவினர், ஓபிசி பிரிவினருக்கு ஒரு தாளுக்கு ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ரூ.1200 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதுவே எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி 
பிரிவினருக்கு முறையே ரூ.500 கட்டணமாகவும் ரூ.600 கட்டணமாகவும் பெறப்பட்டது. 

இந்த நிலையில் தேர்வு  முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. டிஜிட்டல் மதிப்பெண் சான்றிதழ்களையும் சிடெட் சான்றிதழையும் சிபிஎஸ்இ விரைவில் வெளியிட உள்ளது. 

கட் -ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு?

பொதுப் பிரிவு தேர்வர்களுக்கு கட் -ஆஃப் மதிப்பெண் 60 சதவீதம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் எஸ்சி, எஸ்டி,ஓபிசி, மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு 
தகுதி கட் - ஆஃப் மதிப்பெண் இன்னும் குறைவாகவே இருக்கும்.  

பார்ப்பது  எப்படி?

* தேர்வர்கள் https://ctet.nic.in/ctet-aug-23-result/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

* அதில், CTET AUG-23 Result என்ற இணைப்பு தோன்றும். அதை க்ளிக் செய்ய வேண்டும். 

* தொடர்ந்து https://cbseresults.nic.in/ctet_23_aug/CtetAug23.htm என்ற இணைப்பு தோன்றும்.

* அதை க்ளிக் செய்து, பதிவு எண்ணை உள்ளிடவும்.

* தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.

* அதை பதிவிறக்கம் செய்து, வருங்காலத் தேவைகளுக்காகப் பயன்படுத்தலாம். 

2022 தேர்வு

கடந்த 2022ஆம் ஆண்டுக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு  தாள்‌ 1-ற்கான கணினி வழித்‌ தேர்வு (Computer Based Examination) திட்டமிட்டபடி கடந்த 14.10.2022 முதல்‌19.10.2022 வரையிலும்‌ இருவேளைகளில்‌ நடைபெற்றது. கணினி வழியில் நடைபெற்ற தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுதி இருந்தனர்.

கூடுதல் விவரங்களுக்கு: https://ctet.nic.in

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்;  ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்; ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்;  ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்; ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!
அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!
Ilayaraja Vs Vetrimaran: இளையராஜாவையே கடுப்பாக்கிய வெற்றி மாறன்! புலம்பி கொட்டிய இசைஞானி; என்ன செய்தார் தெரியுமா?
Ilayaraja Vs Vetrimaran: இளையராஜாவையே கடுப்பாக்கிய வெற்றி மாறன்! புலம்பி கொட்டிய இசைஞானி; என்ன செய்தார் தெரியுமா?
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
Embed widget