மேலும் அறிய

CTET 2024: சிடெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு; எப்போது வரை- விண்ணப்பிப்பது எப்படி?

CTET 2024 Registration: ஆசிரியப் பணியில் சேர நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (சிடெட்) விண்ணப்பிக்க அவகாசம் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியப் பணியில் சேர நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (சிடெட்) விண்ணப்பிக்க அவகாசம் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

மத்திய அரசு கொண்டு வந்த ஆர்டிஇ எனப்படும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அதன்படி 2 தாள்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST - (TNTET)) நடத்தப்படுகிறது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பணியாற்றலாம்.

இரண்டாம் தாளில் தேர்ச்சி 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பெறுபவர்கள் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிய முடியும். இந்த மாணவர்கள், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதய வித்யாலயா பள்ளிகள், மத்திய திபெத்தியன் பள்ளிகளில் சேர்ந்து பணிபுரியலாம். 

விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

இதற்கிடையே 19ஆவது பதிப்பைக் காணும், 2024ஆம் ஆண்டுக்கான சிடெட் தேர்வு நாடு முழுவதும் ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 2ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஏப்ரல் 4ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம். 

20 மொழிகளில் தேர்வு

நாடு முழுவதும் 20 மொழிகளில் 135 நகரங்களில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு குறித்த விவரங்கள், பாடத்திட்டம், மொழி, தகுதி, தேர்வுக் கட்டணம், தேர்வு மையக்கள் மற்றும் முக்கியத் தேதிகள் உள்ளிட்ட விவரங்கள்,  https://ctet.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. 

கட்டணம் எவ்வளவு?

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத பொதுப் பிரிவினர், ஓபிசி பிரிவினருக்கு ஒரு தாளுக்கு ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ரூ.1200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுவே எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு முறையே ரூ.500 கட்டணமாகவும் ரூ.600 கட்டணமும் பெறப்பட்டு வருகிறது.

விண்ணப்பிப்பது எப்படி?

* தேர்வர்கள் https://ctet.nic.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

அல்லது https://examinationservices.nic.in/examsysctet/Root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFfEytN2I3LFrLvNrMJcZJNlCCcscwykbysLsSXnWv0wO என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.

* அதில் விண்ணப்ப எண், பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட்டு விண்ணப்பிக்கலாம்.

* முதல்முறை விண்ணப்பிப்பவர்கள், முன்பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம். 

முழுமையான கையேட்டுக்கு தேர்வர்கள் https://cdnbbsr.s3waas.gov.in/s3443dec3062d0286986e21dc0631734c9/uploads/2024/03/2024030749.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

வேறு ஏதேனும் தகவல்களைப் பெற விரும்பினால் https://ctet.nic.in என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Embed widget