மேலும் அறிய
Advertisement
CSSS Scholarship Scheme: கல்லூரி மாணவர்களுக்கு சிபிஎஸ்இ உதவித்தொகை; டிசம்பர் 31 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது.
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திக் குறிப்பில், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மத்திய உதவித்தொகை திட்டத்துக்கு (Central Sector Scheme of Scholarship for College and University Students - CSSS) தேசிய உதவித்தொகை தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 2022ஆம் ஆண்டு விண்ணப்பித்து உதவித்தொகை பெற்று வருபவர்கள் முதல் முறை புதுப்பித்துக் கொள்ளலாம். 2021ஆம் ஆண்டு விண்ணப்பித்தவர்கள் 2ஆவது முறையாகவும், 2020ஆம் ஆண்டு விண்ணப்பித்தவர்கள் 3ஆவது முறையாகவும், 2019ஆம் ஆண்டு விண்ணப்பித்தவர்கள் 4ஆவது முறையாகவும் புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்கு மாணவர்கள் scholarships.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
* சம்பந்தப்பட்ட தேர்வு வாரியத்தில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் 80 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.
* ரெகுலர் படிப்பில் சேர்ந்து படிக்க வேண்டும். தொலைதூர அல்லது அஞ்சல் வழிப் படிப்புகளுக்கு உதவித்தொகை கிடையாது.
* பிற உதவித் தொகைகள் அல்லது கட்டணத்தைத் திரும்பப் பெறும் திட்டங்கள் எதிலும் இணைந்து பயன்பெற்றிருக்கக் கூடாது.
* டிப்ளமோ மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடையாது.
விண்ணப்பிப்பது எப்படி?
* தேர்வர்கள் scholarships.gov.in என்ற இணையதள பக்கத்துக்குச் செல்லவும்.
* முகப்புப் பக்கத்தில் CBSE CSSS scholarship scheme 2023 என்ற பக்கம் தோன்றும். அதை க்ளிக் செய்யவும்.
* தோன்றும் புதிய பக்கத்தில் கேட்கப்படும் விவரஙளைப் பதிவு செய்ய வேண்டும்.
* விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, சப்மிட் பொத்தானைக் கொடுக்கவும்.
https://scholarships.gov.in/public/schemeGuidelines/FAQ_DOHE_CSSS.pdf என்ற இணைப்பை பயன்படுத்தி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மத்திய உதவித்தொகை திட்டம் குறித்து அறியலாம்.
எவ்வளவு தொகை?
இளங்கலைப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் என்ற வீதத்தில், ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். முதுகலைப் படிப்புகளுக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். அதேபோல தொழில்நுட்பப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு, முதல் 3 ஆண்டுகளுக்கு 12 ஆயிரம் ரூபாயும் அடுத்த 2 ஆண்டுகளுக்கு அல்லது 1 ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே உதவித் தொகை உண்டு. நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்குக்கே பணம் அனுப்பி வைக்கப்படும்.
உதவித் தொகை குறித்த முழு தகவல்களுக்கு https://scholarships.gov.in/public/schemeGuidelines/Guidelines_DOHE_CSSS.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கவும்.
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion