மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
பள்ளி வாகனங்களில் சினிமா பாடல்களை ஒலிபரப்பக்கூடாது - தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு
பள்ளிப்பேருந்தில் மாணவர்களை இருப்பிடத்தில் இருந்து அழைத்து வரும் போது பேருந்தில் உதவியாளர் ஒருவர் இருக்க வேண்டும் என தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிப்பேருந்தில் மாணவர்களை இருப்பிடத்தில் இருந்து அழைத்து வரும் போது பேருந்தில் உதவியாளர் ஒருவர் இருக்க வேண்டும் என தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் தனியார் பள்ளி மாணவன் தான் பயணம் செய்த பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மாணவர்களை அழைத்து வரும்போது பள்ளி வாகனங்களை முறையாக பராமரிப்பதற்கு கீழ்கண்ட அறிவுரைகளை அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
- பள்ளி வாகனங்களை முறையாக பராமரித்து ஆண்டுதோறும் மோட்டார் வாகன ஆய்வாளர் இடம் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
- பள்ளி பேருந்தில் மாணவர்களை இருப்பிடத்திலிருந்து அழைத்து வரும் போது பேருந்தில் உதவியாளர் ஒருவர் இருக்க வேண்டும்.
- அவர் மாணவர்களை பாதுகாப்பாக வாகனத்தில் இருந்து இறக்கி நாலுபுறமும் வானவர்கள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
- மாணவர்களை அழைத்து வரும் பள்ளிப் பேருந்துகள் ஆட்டோ ரிக்ஷாக்கள் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்றப்பட்டுள்ளது பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.
- அவற்றில் வேக கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.
- மாணவர்களை ஏற்றி இறக்குவதற்கு ஓட்டுநர் உடன் ஒருவர் உதவியாளரையும் வைத்திருக்கவேண்டும்.
- வாகனத்தை ஓட்டும் போது சினிமா பாடல்களை ஒளிபரப்பக் கூடாது.
- மாணவர்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லக்கூடாது.
- ஓட்டுநரின் குழந்தை குடும்ப புகைப்படம் ஒன்றை அவரது இருக்கைக்கு எதிரில் பார்வையில் படும்படி வைத்திருக்க வேண்டும்.
- அவசர தேவைக்கு முக்கியமான தொலைபேசி எண்களை பேருந்தினுள் மற்றும் வெளியே பார்வையில் தெரியும் படி எழுதவேண்டும்.
- பள்ளி வாகனத்தை அதிக வேகத்தில் ஓட்டுவது மது அருந்திவிட்டு ஓட்டுதல் உயிர் சேதம் விளைவிக்கும் ஆபத்தான முறையில் ஓட்டுகளில் ஒரு தடவை கூட டிரைவர் இருந்திருக்க கூடாது இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
பொழுதுபோக்கு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion