சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையில் 89 காலிபணியிடங்கள் - விண்ணப்பம் செய்வது எப்படி?
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 29.11.2021 மாலை 5 மணிக்குள். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.
திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் கீழ்வரும் 89 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம் தபால் மூலமாக தெரிவிக்கப்படும். வகுப்புவாத பட்டியல் அடிப்படையில் நிரப்பப்படும். சென்னை மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
இந்தப் பணியிடங்கள் 11 மாதம் ஒப்பந்த மற்றும் தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் நிரப்படுகிறது.
பணிக்கான விரிவான விண்ணப்ப படிவம் பெருநகர சென்னை மாநகாராட்சி வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இந்த விரிவான விண்ணப்ப படிவத்தை நிறைவு செய்து, உரிய சான்றிதழ்களுடன் (அசல் கல்வி சான்றிதழ் மற்றும் பணி சான்றிதழ்) உரிய வகையில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவுரைகளும் வலைதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.
காலிப்பணியிடங்கள் விவரம்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 29.11.2021 மாலை 5 மணிக்குள். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், நேர்காணல் தேர்வுக்கு வரவழைக்கப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி : திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம்(NTEP), மாவட்ட காசநோய் மையம், 26, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, புளியந்தோப்பு, சென்னை - 600 012.
மேலும், வாசிக்க:
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் - தரவுகள் சொல்வதென்ன?
சென்னையில் புதிய நோய்: 100 க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!
‛தடுப்பூசி போட ஆசிரியர்களை கட்டாயப்படுத்த கூடாது’ வழக்கு தள்ளுபடி -உயர்நீதிமன்றம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்