(Source: ECI/ABP News/ABP Majha)
CBSE Syllabus: 9, 12ஆம் வகுப்புக்கு பாடத்திட்டம்: சிபிஎஸ்இ வெளியீடு- பெறுவது எப்படி?
சிபிஎஸ்இ வாரியத்தில் 10ஆம் வகுப்புக்கு 5 கட்டாயப் பாடங்களும் 2 விருப்பப் பாடங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கு 9, 12ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இந்த பாடத்திட்டம் 9, 10ஆம் வகுப்புகளுக்கு எனவும் 11, 12ஆம் வகுப்புகளுக்கு எனவும் தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ வாரியத்தில் 10ஆம் வகுப்புக்கு 5 கட்டாயப் பாடங்களும் 2 விருப்பப் பாடங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல 12ஆம் வகுப்புக்கு 7 பாடங்கள் முக்கியமானவையாக உள்ளன. குறிப்பாக மொழிப்பாடங்கள், மானுடவியல், கணிதம், அறிவியல், திறன் பாடங்கள், பொது ஆய்வுகள் மற்றும் உடல்நலம், உடற்கல்வி ஆகிய பாடங்களை பிளஸ் 2 பாடத்திட்டம் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், 2024- 25 கல்வி ஆண்டுக்கான 10, 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தைப் பெறுவது எப்படி என்று காணலாம்.
* மாணவர்களும் பெற்றோர்களும் www.cbseacademic.nic.in என்ற இணைப்பை க்ளிக் செய்து செல்லவும்.
* 'Academic' டேப் பகுதியை க்ளிக் செய்யவும்.
* இணைப்பை க்ளிக் செய்து, பிடிஎஃப் ஆவணத்தைத் திறக்கவும்.
* 'Secondary and Senior School Curriculum for the session 2024-25' என்ற பகுதியை க்ளிக் செய்யவும்.
* அதில் உள்ள பிடிஎஃப் கோப்பை க்ளிக் செய்து, டவுன்லோடு செய்து கொள்ளவும்.
* தேவைப்பட்டால் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான 9, 10ஆம் வகுப்பு பாடத்திட்டத்தையும் பெறலாம். எப்படி?
* சிபிஎஸ்இ இணைய தளத்தில் பாடத்திட்டம் பகுதிக்குச் செல்லவும்.
* 9, 10ஆம் வகுப்பு பாடத்திட்டத்தைக் கொண்ட 'Secondary Curriculum (IX-X)' இணைப்பை க்ளிக் செய்யவும்.
* பாடப் பிரிவு வாரியாக, அந்தந்தப் பாடத் திட்டத்தை எடுத்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
* வேண்டுமெனில், தேவையான பாடங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
* வருங்காலப் பயன்பாட்டுக்காக ஆவணங்களை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியங்களின் பாடத்திட்டங்களை என்சிஇஆர்டி என்று அழைக்கப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரிக்கிறது. இந்த நிலையில் 3 மற்றும் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, 2024-25ஆம் கல்வி ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
3, 6ஆம் வகுப்பு புதிய பாடத் திட்டம் குறித்த முழு விவரங்களைப் பெற https://cbseacademic.nic.in/web_material/Circulars/2024/29_Circular_2024.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://cbseacademic.nic.in