மேலும் அறிய

CBSE Term 1 Result: இன்று வெளியான சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரிசல்ட்! அடுத்து கவனிக்க வேண்டியது என்ன?

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு முதல் பருவப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (டிசம்பர் 19) வெளியாகி உள்ளன. 

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (டிசம்பர் 19) வெளியாகி உள்ளன. எனினும் இது ஆன்லைன் மூலம் வெளியிடப்படவில்லை. 
 
கரோனா பெருந்தொற்றுச் சூழல் காரணமாக சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த 2020ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டன. அதுபோன்ற எதிர்பாராத சூழல் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக, இரு பருவப் பொதுத் தேர்வு முறையை சிபிஎஸ்இ கடந்த ஆண்டு அறிவித்தது.

புதிய நடைமுறையின்படி, பொதுத் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முதல் பருவத் தேர்வு நவம்பர் - டிசம்பர் மாதங்களிலும், 2-வது பருவத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்வு 90 நிமிடங்களுக்கு நடைபெறுகிறது.

ஒவ்வொரு பருவத் தேர்விலும் பாடத்திட்டத்தின் 50 சதவீதப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஏதேனும் ஒரு தேர்வை நடத்த முடியாத சூழலில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

புதிய தேர்வு முறையை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், மாதிரி கேள்வித் தாள்களும், மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டமும் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டன. ஏற்கெனவே திட்டமிட்டவாறு நடப்புக் கல்வி ஆண்டுக்கான (2021-22) சிபிஎஸ்இ முதல் பருவப் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்றது. 

இதற்கிடையே 10ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவத் தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி மே 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவத் தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவப் பொதுத்தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. எனினும் இது ஆன்லைன் மூலம் வெளியிடப்படவில்லை. 

சிபிஎஸ்இ வாரியம் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மதிப்பெண் பட்டியலை இன்று (டிசம்பர் 19) அனுப்பியுள்ளது. எனினும் இந்தப் பட்டியலில் மாணவர்கள் தேர்ச்சி, தேர்ச்சி அடையவில்லை, மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்பது மாதிரியான தகவல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இரண்டு பருவப் பொதுத் தேர்வுகளின் முடிவுக்குப் பிறகே அந்த அறிவிப்பு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி பள்ளி மாணவர்களே ரெடியா... ! அடுத்து 5 நாள் தொடர் விடுமுறை !
புதுச்சேரி பள்ளி மாணவர்களே ரெடியா... ! அடுத்து 5 நாள் தொடர் விடுமுறை !
அகில இந்திய தொழிற்தேர்வு: தனித்தேர்வர்களுக்கு மாத உதவித்தொகையுடன் அரிய வாய்ப்பு!
அகில இந்திய தொழிற்தேர்வு: தனித்தேர்வர்களுக்கு மாத உதவித்தொகையுடன் அரிய வாய்ப்பு!
PM Yasasvi Scholarship : மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! அள்ளிக்கொடுக்கும் PM-YASASVI திட்டம்- விண்ணப்பிப்பது எப்படி.?
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! அள்ளிக்கொடுக்கும் PM-YASASVI திட்டம்- விண்ணப்பிப்பது எப்படி.?
குடும்பத்துடன் பயணிக்க சிறந்த 7 சீட்டர் கார்! குறைந்த விலையில் அசத்தும் டாப் மாடல்கள்!
குடும்பத்துடன் பயணிக்க சிறந்த 7 சீட்டர் கார்! குறைந்த விலையில் அசத்தும் டாப் மாடல்கள்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: வெற்றிப் பயண திட்டம் - கோயம்பேட்டில் தொடங்கி வைத்த CM விஜய் - முக்கிய நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு
வெற்றிப் பயண திட்டம் - கோயம்பேட்டில் தொடங்கி வைத்த CM விஜய் - முக்கிய நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு
Free Bus For Women : எந்த எந்த பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம்.! எவ்வளவு தூரம் செல்லலாம்-தமிழக அரசின் குட் நியூஸ்
எந்த எந்த பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம்.! எவ்வளவு தூரம் செல்லலாம்-தமிழக அரசின் குட் நியூஸ்
ICC World Cup 2027 schedule: ODI உலகக் கோப்பை அட்டவணை - இந்திய அணியின் போட்டி தேதி, எதிரணி, மைதான விவரங்கள்
ODI உலகக் கோப்பை அட்டவணை 2027 - இந்திய அணியின் போட்டி தேதி, எதிரணி, மைதான விவரங்கள்
TN Registrar Office: இனி சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு கிடையாது, 100 பதிவு அலுவலகங்களை மூடிய அரசு - ஏன் தெரியுமா?
இனி சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு கிடையாது, 100 பதிவு அலுவலகங்களை மூடிய அரசு - ஏன் தெரியுமா?
CM Vijay: ரைட், ரைட்..! டிக்கெட்டை கிழித்து, வெற்றிப் பயணத்தை தொடங்கி வைத்த CM விஜய் - மகளிர் செம்ம ஹாப்பி
ரைட், ரைட்..! டிக்கெட்டை கிழித்து, வெற்றிப் பயணத்தை தொடங்கி வைத்த CM விஜய் - மகளிர் செம்ம ஹாப்பி
MK STALIN DMK : தாராபுரத்தை தட்டி தூக்க களத்தில் இறங்கிய ஸ்டாலின்.! வழி நெடுக குவிந்த மக்கள்- மாஸ் காட்டும் திமுக
தாராபுரத்தை தட்டி தூக்க களத்தில் இறங்கிய ஸ்டாலின்.! வழி நெடுக குவிந்த மக்கள்- மாஸ் காட்டும் திமுக
Karthigai Deepam: உண்மையை உடைத்த கார்த்திக்.. ஊருக்குள் வரவிடாமல் தடுக்கும் சிவனாண்டி..! கார்த்திகை தீபத்தில் இன்று ஒரு மணி நேரம்!
Karthigai Deepam: உண்மையை உடைத்த கார்த்திக்.. ஊருக்குள் வரவிடாமல் தடுக்கும் சிவனாண்டி..! கார்த்திகை தீபத்தில் இன்று ஒரு மணி நேரம்!
Vetri Payanam Thittam: வெற்றிப் பயண திட்டம்.. காந்தி பிறந்தநாளில் விஜய் தொடங்கி வைப்பது ஏன் தெரியுமா?
Vetri Payanam Thittam: வெற்றிப் பயண திட்டம்.. காந்தி பிறந்தநாளில் விஜய் தொடங்கி வைப்பது ஏன் தெரியுமா?
Embed widget