மேலும் அறிய

CBSE Board 2026: மாணவர்களுக்கு கெடுபிடி..! 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விதிகளை கடுமையாக்கிய சிபிஎஸ்இ - புது ரூல்ஸ்..

CBSE Board 2026 Rules: பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான விதிகளை கடுமயாக்கி சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

CBSE Board 2026 Rules: பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான புதிய விதிகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் - புதிய விதிகள் அமல்

10 மற்றும் 12ம்வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான விதிகளை திருத்தி, சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் பொதுதேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இந்த விதிகள் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, வருகைப்பதிவு, இண்டெர்னல் அசெஸ்மெண்ட்ஸ் எனப்படும் உள் மதிப்பீடுகள் மற்றும் எழுதும் விதிமுறைகள் ஆகியவை கடுமையாக்கப்பட்டுள்ளன. மேலும், 10ம் வகுப்பு மாணவர்கள் ஒரே கல்வி ஆண்டில் இரண்டு முறை பொதுதேர்வு எழுதும் வாய்ப்பை பெறுவர். புதிய சீர்திருத்தங்களானது நியாயமான வாய்ப்புகளை மேம்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் மற்றும் ஒழுக்கத்தை உறுதி செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளன என சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களை சுயமாக மேம்படுத்திக் கொள்ள புதிய விதிகளுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

பொதுத்தேர்வுகளில் CBSE-யின் புதிய விதிகள் என்ன?

1. கட்டாய வருகைப் பதிவு..

சிபிஎஸ்இ நிர்வாகம் மேற்கொண்டுள்ள மாற்றங்களில் குறிப்பிட்ட அளவிலான வருகைப்பதிவு கட்டாயம் என்பது மிக முக்கியமானதாக கூறப்படுகிறது. 9-10 மற்றும் 11-12ம் வகுப்பு மாணவர்கள், இரண்டு ஆண்டுகளிலும் குறைந்தபட்சம் 75% வருகைப் பதிவை கொண்டிருந்தால் தான், பொதுத்தேர்வு எழுத தகுதி பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான வருகைப் பதிவுகளுக்கு பொருந்தும். அதேநேரம், மருத்துவ விடுப்பு போன்ற விதிவிலக்குகளுக்கு வழக்கமாக செல்லுபடியாகும் ஆவணங்கள் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. இன்டெர்னல் மதிப்பெண்கள்..

இரண்டாவதாக, இண்டெர்னல் மதிப்பெண்களில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தமும் கவனத்தை ஈர்க்கிறது. ப்ராஜக்ட், செய்முறை தேர்வு மற்றும் சீரான இடைவெளியில் பள்ளிகளில் வைக்கும் தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண்கள் முக்கியமானதாக உருவெடுத்துள்ளன. ஒரு இன்டர்னல் அசெஸ்மெண்டை தவறவிட்டால் கூட, வாரியத்தின் “அத்தியாவசிய மறுபரிசீலனை” பிரிவின் கீழ் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத தகுதியற்றவராக அறிவிக்கப்படலாம். பள்ளிகள் இந்த மதிப்பீடுகளை உன்னிப்பாகக் கண்காணித்து இணக்கத்தை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3. இரண்டு முறை தேர்வு வாய்ப்புகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரே ஆண்டில் இரண்டு முறை தேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கப்படுவது மிகப்பெரிய சீர்திருத்தமாக கருதப்படுகிறது. பிப்ரவரி - மார்ச் மாதத்தில் ஒரு முறையும், மே-ஜுன் மாதங்களில் ஒருமுறையும் தேர்வுகள் நடத்தப்படுமாம். இரண்டு முறையும் மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்றும், அதில் சிறந்த மதிப்பெண்கள் இறுதி மதிப்பெண் சான்றிதழில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இரண்டாவது தேர்வில் மாணவர்கள் பங்கேற்க முதலில் நடைபெறும் தேர்வில் குறைந்தபட்சம், 3 பாடங்களுக்கான தேர்விலாவது பங்கேற்று இருக்க வேண்டும்.

4. தேர்வு எழுதும் நடைமுறை

கடைசியாக விடைத்தாளை நிர்வகிப்பதற்கான விதிகளையும் சிபிஎஸ்இ நிர்வாகம் மாற்றியுள்ளது. அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை, மாணவர்கள் விடைத்தாளில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கட்டாயமாக எழுத வேண்டுமாம். குறிப்பிட்ட பகுதியை தாண்டி எழுதப்பட்டு இருந்தால்,  பதில் சரியானதாக இருந்தாலும் மதிப்பெண் வழங்கப்படாமல் போக வாய்ப்புள்ளதாம். திருத்துபவர்களுக்கான சுமையை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சீர்திருத்தங்களானது, தேசிய கல்விக் கொள்கை 2020 உடன் இணைந்து செயல்படவும், மனப்பாடம் செய்வதை தடுத்து மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கவும் CBSE மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளாகும். 2026 பொதுத்தேர்வுகளில் கடைசி நிமிட சந்தேகங்கள் மற்றும் குழப்பங்களை தவிர்க்க, பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் புதிய விதிகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப தயாராகவும் சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

Frequently Asked Questions

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு என்ன புதிய விதிகள்?

வருகைப்பதிவு, உள் மதிப்பீடுகள் மற்றும் தேர்வு எழுதும் முறையில் புதிய விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு முறை தேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கப்படும்.

பொதுத்தேர்வு எழுத எவ்வளவு வருகைப் பதிவு அவசியம்?

9-10 மற்றும் 11-12 ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு ஆண்டுகளிலும் குறைந்தபட்சம் 75% வருகைப் பதிவு வைத்திருக்க வேண்டும். மருத்துவ விடுப்பு போன்ற விதிவிலக்குகளுக்கு ஆவணங்கள் பரிசீலிக்கப்படும்.

10 ஆம் வகுப்பு மாணவர்கள் எத்தனை முறை பொதுத்தேர்வு எழுதலாம்?

10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரே கல்வி ஆண்டில் இரண்டு முறை பொதுத்தேர்வு எழுதும் வாய்ப்பை பெறுவர். முதல் முறை தேர்வு எழுதினால் மட்டுமே இரண்டாவது முறை எழுத முடியும்.

உள் மதிப்பீடுகள் (Internal Assessments) ஏன் முக்கியம்?

ஒரு உள் மதிப்பீட்டை தவறவிட்டாலும், மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத தகுதியற்றவராக அறிவிக்கப்படலாம். பள்ளிகள் இந்த மதிப்பீடுகளை உன்னிப்பாகக் கண்காணிக்கும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
Volkswagen SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
Embed widget