மேலும் அறிய

NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!

NCERT மற்றும் CBSE அமைப்புகளில் கடுமையான பணியாளர் பற்றாக்குறை: நாடாளுமன்றக் குழு கவலை

இந்தியாவின் முக்கிய பள்ளிக் கல்வி அமைப்புகளான தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆகியவற்றில் நிலவும் கடுமையான பணியாளர் பற்றாக்குறை குறித்து மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நாடாளுமன்றக் குழு அறிக்கை தீவிர கவலை தெரிவித்துள்ளது.

NCERT-ல் 1,596 பணியிடங்கள் காலி

பிடிஐ  செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மதிப்பீட்டுக் குழுவின் 2026-27ஆம் ஆண்டு அறிக்கையில், NCERT-ல் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் பாதிக்கும் மேற்பட்டவை காலியாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 2025 நிலவரப்படி, மொத்தம் அனுமதிக்கப்பட்ட 2,844 பணியிடங்களில் 1,248 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். மீதமுள்ள 1,596 இடங்கள் காலியாக உள்ளன. இதில் 916 நிர்வாகப் பணியாளர்கள், 404 துணைப் பணியாளர்கள், 145 கல்விசார் பணியிடங்கள் மற்றும் 131 பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் அடங்கும்.

இந்தப் பற்றாக்குறையானது, தேசிய கல்விக் கொள்கை 2020-ஐச் செயல்படுத்துதல், புதிய பாடத்திட்டங்கள் மற்றும் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பை உருவாக்குதல் போன்ற NCERT-இன் முக்கியப் பணிகளை நேரடியாகப் பாதிக்கும் எனக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

CBSE-ல் 44 % பணியிடங்கள் காலி

இதேபோல், சிபிஎஸ்இ வாரியத்திலும் 44 சதவீத பணியாளர் பற்றாக்குறை உள்ளது. அனுமதிக்கப்பட்ட 2,117 இடங்களில் 933 இடங்கள் காலியாக உள்ளன. இதில் அதிகபட்சமாக குரூப் சி ஆதரவுப் பணியாளர் பிரிவில் 595 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அன்றாடப் பணிகளுக்காக சிபிஎஸ்இ தற்போது தற்காலிக ஒப்பந்த ஊழியர்களையே அதிக அளவில் நம்பியுள்ளது.

குழுவின் எச்சரிக்கையும் பரிந்துரையும்

தேசிய அளவிலான பொதுத்தேர்வு தொடர்பான முக்கியப் பணிகளுக்குத் தற்காலிக ஊழியர்களைப் பயன்படுத்துவது, தேர்வின் பாதுகாப்பு, தரம் மற்றும் சீரான செயல்பாட்டிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என நாடாளுமன்றக் குழு கடுமையாக எச்சரித்துள்ளது. தன்னாட்சி அமைப்பான சிபிஎஸ்இ, ஒப்பந்தத் தொழிலாளர்களை நம்பியிருப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும், விரைவான மற்றும் காலக்கெடுவுடன் கூடிய பணி நியமனங்களைத் தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

1992- 93ல் 3,787 ஆக இருந்த சிபிஎஸ்இ இணைவு பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை, 2024-25ல் 31,234 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 25 மண்டல மற்றும் 5 துணை மண்டல அலுவலகங்கள் மூலம் இவை நிர்வகிக்கப்படுகின்றன. 2025 ஆம் ஆண்டில், 12-ஆம் வகுப்பில் 1.70 மில்லியன் மற்றும் 10-ஆம் வகுப்பில் 23.8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இவ்வளவு பெரிய வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளும்போது இந்தப் பணியாளர் பற்றாக்குறை மிகவும் ஆபத்தானது.

இந்த இரண்டு உயரிய கல்வி நிறுவனங்களின் ஒருமைப்பாடு மற்றும் செயல்பாட்டுத் திறனைப் பாதுகாக்க, கல்வி அமைச்சகத்தின் அவசரத் தலையீடு மற்றும் விரைவான பணி நியமனங்கள் மிகவும் அவசியம் எனக் குழு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
Top 5 EV Car Companies: களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
Embed widget