Brain Teaser: மூளை இருக்கா? படப் புதிரில் என்ன வித்தியாசம்?- அரை நிமிடம்தான் நேரம்!
இதைக் கொண்டு உங்களின் ஐ.க்யூ., கவனிக்கும் திறன், குறிப்பிட்ட சூழல் அழுத்தத்தின் கீழ் சிந்திக்கும் திறமை ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம்.
அன்றாட பரபரப்புகளை அள்ளித் தரும் அரசியல் செய்திகள், அதிரடி குற்றச் செய்திகள், சினிமா ஸ்கூப்புகள், விளையாட்டு செய்திகள் ஆகியவற்றுக்கு மத்தியில், மூளைக்கு வேலை கொடுக்கும் சுவாரசியங்கள் சிலவற்றைச் செய்யலாமா?
இந்த நேரத்தில் ஓவியங்களுக்கு இடையே உள்ள வித்தியாசங்களைக் கண்டுபிடிப்பது, படப் புதிர்கள், புகைப்படங்களில் ஒளிந்திருக்கும் பிற பொருட்களை ஆய்ந்து அறியலாம். இதனால் சோம்பிக் கிடக்கும் மனதை புத்துணர்ச்சி மிக்கதாக மாற்ற முயற்சிக்கலாம்.
இதோ இந்த மூளை ஓவியத்தைப் பாருங்கள்.
மூளைக்கு வேலை கொடுக்கும் மூளை ஓவியம் இது. இதைக் கொண்டு உங்களின் ஐ.க்யூ., கவனிக்கும் திறன், குறிப்பிட்ட சூழல் அழுத்தத்தின் கீழ் சிந்திக்கும் திறமை ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம். இந்த மூளை ஓவியத்தில் என்ன வித்தியாசம்? கண்டுபிடித்தீர்களா?
இதோ 30 விநாடிகள் டைம்..
..
..
..
முடிந்துவிட்டது. என்ன கண்டுபிடித்தீர்களா?
கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுகள். முடியாதவர்கள் கீழே பாருங்கள்..
மூளை ஓவியத்தில் பெரும்பாலான உருவங்கள் வாயின் அருகில் கையை வைத்திருக்கின்றன. ஆனால் ஒன்று மட்டும் கையை தலைக்கு அருகே வைத்திருக்கிறது.
மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த மூளை புதிர் சிறிது நேரம் உங்களை சுவாரசியமாக்கி இருக்கும்தானே!
- வாருங்கள்.. அடுத்தடுத்த புதிர்களுக்கு விடை கண்டுபிடித்து அசத்தலாம்.