இந்தியாவில் குறைந்த கல்வியறிவு விகிதம் கொண்ட மாநிலம் பீகார்… அதிகபட்சம் கேரளா; இணை அமைச்சர் பதில்!
பீகார் இந்தியாவில் 61.8% ஆகக் குறைந்த எழுத்தறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. 94% கல்வியறிவு விகிதத்துடன் கேரளா முதலிடத்தில் உள்ளது.
மாநிலவாரியாக கல்வியறிவு விகிதம் குறித்து மக்களவையில் எழுத்துப்பூர்வமாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி பதிலளித்துள்ளார்.
மாநிலவாரி கல்வியறிவு சதவிகிதம்
மத்திய கல்வி அமைச்சகத்தின் கூற்றுப்படி, பீகார் இந்தியாவில் 61.8% ஆகக் குறைந்த எழுத்தறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசம் 65.3% மற்றும் ராஜஸ்தான் 66.1% ஆகிய விகிதத்தில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்தியாவில் 94% கல்வியறிவு விகிதத்துடன் கேரளா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து லட்சத்தீவு 91.85% மற்றும் மிசோரம் 91.33% என்று அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
கிராமப்புற கல்வியறிவு
மக்களவையில் எழுத்துப்பூர்வமாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி இவ்வாறு பதிலளித்தார். கிராமப்புற இந்தியாவில் கல்வியறிவு விகிதம் 67.77% ஆக உள்ளது, இது நகர்ப்புற இந்தியாவில் 84.11% ஆக உள்ளது என்று கூறினார். 7.00 கோடி வயது வந்தோருக்கான கல்வியறிவு இல்லாதவர்களை எழுத்தறிவு பெற்றவர்களாக மாற்றும் இறுதி இலக்குக்கு எதிராக, ஆகஸ்ட் 2010 முதல் மார்ச் 2018 வரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங் (NIOS) யின் இரு வருட அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 7.64 கோடி மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
வயது வந்தோர் எழுத்தறிவு விகிதத்தை மேம்படுத்துதல்
சமக்ரா ஷிக்ஷா திட்டம், கல்வியில் உலகளாவிய அணுகல் மற்றும் தக்கவைப்பு, பாலினம் மற்றும் சமூக வகை இடைவெளிகளைக் குறைத்தல் ஆகியவற்றை களைந்து எல்லா மாணவர்களுக்கும் கல்வி கிடைக்க வழிவகை செய்கிறது. மேலும் ப்ரீ-ஸ்கூல் முதல் 12ஆம் வகுப்பு வரை கற்றல் நிலைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சமக்ரா சிக்ஷா திட்டத்தை இந்தியா முழுவதும் ஒரு பெரும் செயல்திட்டமாக செயல்படுத்துவதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உதவுகிறது.
சாக்ஷர் பாரத் திட்டம்
வயது வந்தோருக்கான கல்வியறிவு விகிதங்களை மேம்படுத்துவதற்காக, மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய சாக்ஷர் பாரத் திட்டம் 26 மாநிலங்களில் உள்ள 404 மாவட்டங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் கிராமப்புறங்களில் செயல்படுத்தப்பட்டது, இது 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பெண்களின் கல்வியறிவு விகிதம் 50% அல்லது அதற்கும் குறைவாக இருந்தது, தற்போது மேம்பட்டுள்ளது. ஐந்தாண்டுத் திட்டத்தின் முடிவில் நாட்டின் ஒட்டுமொத்த கல்வியறிவு விகிதத்தை 80% ஆக உயர்த்தவும், பாலின இடைவெளியை 10% புள்ளிகளாகக் குறைக்கவும் இந்தத் திட்டம் இலக்காகக் கொண்டது என்று தேவி கூறினார். திட்டம் மார்ச் 31, 2018 வரை நீட்டிக்கப்பட்டது.