B.Ed. Admission: அனைத்து வகைக் கல்லூரிகளிலும் 69% இட ஒதுக்கீடு கட்டாயம்: வழிகாட்டல் வெளியீடு
அனைத்து வகைக் கல்லூரிகளிலும் பி.எட். மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு கட்டாயம் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்களை உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அனைத்து வகைக் கல்லூரிகளிலும் பி.எட். மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு கட்டாயம் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்களை உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து உயர் கல்வித்துறை சார்பில் கல்லூரிக் கல்வி இயக்குநர் ஈஸ்வர மூர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
’’அனைத்து வகைக் கல்லூரிகளிலும் பி.எட். மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். இணையதளம் வாயிலாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.
பி.எட். படிப்பில் சேர விரும்பும் 50 % மதிப்பெண்களை இளங்கலைப் படிப்புகளில் பெற்றிருக்க வேண்டும். எனினும் வகுப்பு வாரியாகத் தளர்வு அளிக்கப்படுகிறது. எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 40 சதவீதமும் எம்பிசி பிரிவினருக்கு 43 சதவீதமும் பிசி பிரிவினருக்கு 45% மதிப்பெண்களும் பெற்றிருந்தால் போதும்.
இளங்கலை அல்லது முதுகலைப் படிப்புகளுக்கு இணையான படிப்புகள் ( Equivalent Degree ) என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளை முடித்தவர்களும் தொடர்புடைய படிப்புகளில் பி.எட். சேரலாம்.
பொறியியல் படிப்புகளில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பு, 12ஆம் வகுப்பு தரமாகவே கருதப்படும்.
10, 12ஆம் வகுப்புகளை முடிக்காமல், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள், பிஎட் படிப்புக்கு தகுதி இல்லாதவர்கள்.
என்னென்ன பிரிவுகள் - தகுதி
தமிழ்/ உருது (சுயநிதிக் கல்லூரிகளில் மட்டும் உருது மொழி) - இளங்கலை
ஆங்கிலம் - இளங்கலை
கணிதம் - இளங்கலை
இயற்பியல் அறிவியல் (இயற்பியல்) - இளங்கலை
இயற்பியல் அறிவியல் (வேதியியல்) - இளங்கலை
உயிரியல் அறிவியல் (தாவரவியல்) - இளங்கலை
உயிரியல் அறிவியல் (விலங்கியல்) - இளங்கலை
வரலாறு - இளங்கலை
புவியியல் - இளங்கலை
கணினி அறிவியல் - இளங்கலை
ஹோம் சயின்ஸ் - முதுகலை
பொருளாதாரம் - முதுகலை
வணிகவியல் - முதுகலை
அரசியல் அறிவியல் - முதுகலை
சமூகவியல் - முதுகலை
தர்க்கம் - முதுகலை
இந்திய கலாச்சாரம் - முதுகலை
தத்துவம் - முதுகலை ஆகிய படிப்புகள் அவசியம் ஆகும்’’.
இவ்வாறு உயர் கல்வித்துறை சார்பில் கல்லூரிக் கல்வி இயக்குநர் ஈஸ்வர மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இவற்றையும் வாசிக்கலாம்: