மேலும் அறிய

AYUSH Counselling: ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது: யார் யாருக்கு எப்போது?- விவரம்

ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகிய ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று (டிசம்பர் 27) தொடங்கி உள்ளது.

கலந்தாய்வு:

ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகிய ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று (டிசம்பர் 27) தொடங்கி உள்ளது. இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 89 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் தமிழகத்தில் 5 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலம் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆகிய 5 கல்லூரிகள் ஆயுஷ் படிப்புகளைக் கற்பித்து வருகின்றன. 

ஆயுஷ்படிப்புகள்:

நீட் மதிப்பெண் அடிப்படையில்தான் ஆயுஷ் படிப்புகளின் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் (ஆயுஷ் - சித்தா (பிஎஸ்எம்எஸ்), ஆயுர்வேதா (பிஏஎம்எஸ்), யுனானி (பியுஎம்எஸ்), ஓமியோபதி (பிஎச்எம்எஸ்) என்று மத்திய அரசு அறிவித்ததில் இருந்து, நீட் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2022- 23ஆம் கல்வி ஆண்டுக்கான ஆயுஷ் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்கி உள்ளது. 

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் இந்த கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் 10 மணி வரை முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடக்க உள்ளது.

அரசு ஒதுக்கீடு:

1.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பொதுப் பிரிவினருக்கும் (580 முதல் 453 நீட் மதிப்பெண்கள் வரை பெற்ற முதல் 203 விண்ணப்பதாரர்களுக்கு) பிற்பகல் 3.30 மணி முதல் நீட் மதிப்பெண்கள் 452 முதல் 426 வரை பெற்ற 203 முதல் 303 பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்குக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. 

இந்த வகையில் அரசு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு டிசம்பர் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இந்தக் கலந்தாய்வு 2023ஆம் ஆண்டு ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 

அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 2,573 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 878 விண்ணப்பங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு 707 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசுக் கல்லூரிகளில் 21 இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 68 இடங்கள் என மொத்தம் 89 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் 424 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.

கலந்தாய்வு விவரங்களை முழுமையாக அறிய: https://www.tnhealth.tn.gov.in/online_notification/notification/N22123919.pdf

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
"தப்பா நினைச்சுக்காதீங்க" நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்காதது ஏன்? விஜய் விளக்கம்! 
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்”உள்துறை குடுங்க, இல்லனா...” பிடிவாதமாக இருக்கும் ஷிண்டே! விழிபிதுங்கி நிற்கும் பாஜகஉதயநிதி முன் தள்ளுமுள்ளு! போர்வையை இழுத்த பெண்கள்! கோபத்தில் கத்திய POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
"தப்பா நினைச்சுக்காதீங்க" நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்காதது ஏன்? விஜய் விளக்கம்! 
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
கண்ணுக்கெட்டும் தூரம் வெள்ளம்! தண்ணீரில் மூழ்கிய விழுப்புரம் சாலை! தத்தளிக்கும் மக்கள்! - வீடியோ
கண்ணுக்கெட்டும் தூரம் வெள்ளம்! தண்ணீரில் மூழ்கிய விழுப்புரம் சாலை! தத்தளிக்கும் மக்கள்! - வீடியோ
ஆந்திராவிலிருந்து 26 கிலோ கஞ்சா கடத்தல் - தேனியில் சிக்கிய கேரள நபர்கள்
ஆந்திராவிலிருந்து 26 கிலோ கஞ்சா கடத்தல் - தேனியில் சிக்கிய கேரள நபர்கள்
வாய் துடுக்காக பேசுவதை விட்டுவிட்டு மக்களை காக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் காட்டம்
வாய் துடுக்காக பேசுவதை விட்டுவிட்டு மக்களை காக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் காட்டம்
Salem Flood: சேலத்தில் கனமழை... சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!
Salem Flood: சேலத்தில் கனமழை... சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!
Embed widget