கொரோனாவிற்கு பின் ட்யூஷன் செல்லும் மாணவர்கள் 10% உயர்வு; அறிக்கை என்ன சொல்கிறது!
கொரோனா தொற்றுநோய்க்கு பிறகு டியூஷனில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையும், அரசு பள்ளியில் சேர்க்கை விகிதமும் அதிகரித்திருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
தொற்றுநோய் காரணமாக பள்ளி வகுப்பறைகள் முன்னெப்போதும் போல விறுவிறுப்பாக இல்லாதது பெற்றோர்கள் அனைவருக்கும் உள்ள வருத்தம் தான். ஆன்லைன் கல்வியின் மீது பெரிய நாட்டம் இல்லாமலும், அதனை அணுகுவதற்கான மின் சாதனங்கள் இல்லாததும் பெரிய அளவில் பிரச்சனையாக உள்ளது. இதன் வெளிப்பாடாக வருடாந்திர கல்வி நிலை அறிக்கையின் (ASER) படி அதிகமான பள்ளி மாணவர்கள் ட்யூஷன் சென்று படிக்கிறார்கள் என்று கூறுகிறது. புதன்கிழமை வெளியிடப்பட்ட ASER 2021 அறிக்கை, 2018 இல் 30% ஆக இருந்த ட்யூஷன் செல்லும் பள்ளிக் குழந்தைகளின் விகிதம் 40% ஆக உயர்ந்துள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த விகிதம் பாலினம் மற்றும் அனைத்து தரங்கள் மற்றும் பள்ளி வகைகளிலும் அதிகரித்துள்ளது. கேரளாவைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் கல்விக்கட்டணம் அதிகரித்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.
பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு குறைவான குழந்தைகளே டியூஷன் படிப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. கணக்கெடுப்பின் போது பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் குழந்தைகளிடையே டியூஷன் வகுப்புகள் செல்பவர்களாக, 5-16 வயதுக்குட்பட்ட 75,234 குழந்தைகளை உள்ளடக்கிய 25 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2018 மற்றும் 2021 க்கு இடையில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பது ஆய்வு முடிவின் ஒரு சுவாரஸ்யமான அம்சமாகும். 2020 இல் 65.8% மற்றும் 2018 இல் 64.3% ஆக இருந்த 2021 ஆம் ஆண்டில் 70.3% குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.
2006 முதல் 2014 வரை இந்தியாவில் தனியார் பள்ளிக்கல்வி வேகமாக அதிகரித்து, அங்கிருந்து 30% வரை சென்றதாக அறிக்கை கூறுகிறது. இருப்பினும், தொற்றுநோய் ஆண்டுகளில், தனியார் சேர்க்கை கணிசமாகக் குறைந்தது. 6-14 வயதுக்குட்பட்டவர்களில், 2018 இல் 32.5% ஆக இருந்த தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 2021 இல் 24.4% ஆகக் குறைந்துள்ளது. இந்த மாற்றம் அனைத்து தரங்களிலும் மற்றும் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் மத்தியில் காணப்படுகிறது.
கொரோனா தொற்றுநோய் காரணமாக பள்ளிகள் மூடப்படுவதும், தனியார் பள்ளிகளின் மிகப்பெரிய கட்டணக் கட்டமைப்போடு ஒப்பிடும்போது கட்டணம் இல்லாமல் இருக்கும் அரசுப் பள்ளிகளைத் தேர்வுசெய்ய பெற்றோர்களின் இயலாமையும் இதற்குக் காரணமாக ஆகிறது. தெலுங்கானாவில் உள்ள ஒரு அரசு பள்ளி ஆசிரியர் கருத்துப்படி, தொற்றுநோய் காலத்தின் குறைந்த வருமானம் இந்த மாற்றத்திற்கு ஒரு காரணம் என்று கூறுகிறார். இப்படி கோரோணா தொற்றுநோய் வந்ததில் இருந்து ஒரு பெரிய மாற்றம் கண்டுள்ளதை அந்த ஆய்வறிக்கை வெளிப்படுத்துகிறது. பள்ளிகள் கட்டணத்தை உயர்த்தியதும், பெற்றோர்களுக்கு வருமானம் குறைந்ததும் ஒரே சமயத்தில் நடப்பதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என ஆய்வறிக்கை கூறுகிறது.