மேலும் அறிய

TRB : இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம்: டி.ஆர்.பி முக்கிய வழிமுறைகள் வெளியீடு

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வது குறித்து டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.  

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வது குறித்து டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.  

முன்னதாக விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை மார்ச் 20ஆம் தேதி வரை நீட்டித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. தொடர்ந்து இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறி உள்ளதாவது:  

விண்ணப்பதாரர்கள்‌ திருத்தங்கள்‌ (Edit Option) மேற்கொள்ளும்போது கீழ்க்காணும்‌ வழிமுறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகளை கவனமாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது.

  1. இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பித்து தேர்வுக்கட்டணம்‌ செலுத்திய விண்ணப்பதாரர்கள்‌ மட்டுமே தங்களின்‌ விண்ணப்பத்தில்‌ திருத்தம்‌ செய்ய அனுமதிக்கப்படுவர்‌.
  2. விண்ணப்பதாரர்கள்‌ தங்களது விவரங்களை திருத்தம்‌ செய்து புதுப்பித்தவுடன்‌, முதல்‌ பக்கத்திலிருந்து கடைசி பக்கம்‌ வரைக்கும்‌ உள்ள “சமர்ப்பி”பொத்தானை அழுத்தி விண்ணப்பத்தில்‌ செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்யவேண்டும்‌. அவ்வாறு செய்யவில்லை எனில்‌ செய்யப்பட்ட மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  3. கடைசியாக உள்ள சமர்ப்பி (Final Submit) பொத்தானை அழுத்தி உறுதி செய்யவில்லை எனில்‌, அன்னாரின்‌ விண்ணப்பம்‌ கணக்கில்‌ எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. முந்தைய விவரங்கள்‌ மட்டுமே பரிசீலிக்கப்படும்‌.
  4. விண்ணப்பதாரர்கள்‌ மாற்றங்களை செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்தபின்‌ அதில்‌ எந்த மாற்றங்களையும்‌ செய்யக்கூடாது.
  5. திருத்தம்‌ மேற்கொள்ளும்‌ விண்ணப்பதாரர்கள்‌, திருத்தம்‌ மேற்கொள்ளும்‌ குறிப்பிட்ட இடத்தில்‌ உரிய திருத்தம்‌ மேற்கொண்டபின்பு தொடர்ச்சியாக அடுத்த பகுதிகளையும்‌ சரிபார்க்க வேண்டும்‌. எனெனில்‌ சில பகுதிகளில்‌ திருத்தம்‌ செய்யும்பொழுது, மற்ற பகுதிகளிலும்‌ மாற்றம்‌ செய்ய வேண்டிய அவசியம்‌ எற்படும்‌.
  6. திருத்தம்‌ செய்த பின்னர்‌ Print Preview Page சென்று அனைத்தும்‌ சரியாக உள்ளபட்சத்தில்‌ Declaration-ல்‌ ஒப்புதல்‌ அளித்த பின்னரே தங்களின்‌ விண்ணப்பம்‌ ஏற்றுக்கொள்ளப்படும்‌.
  7. விண்ணப்பதாரர்கள்‌ தங்கள்‌ விண்ணப்பத்தில்‌ எந்தவொரு மாற்றமும்‌செய்யவில்லை எனில்‌ முந்தைய தரவுகளே பரிசீலிக்கப்படும்‌.
  8. விண்ணப்பதாரர்கள்‌ கைபேசி எண்‌, மின்னஞ்சல்‌ முகவரி ஆகியவற்றில்‌ மாற்றங்கள்‌ செய்ய இயலாது.
  1. இனம்‌ (Community) மற்றும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ (PWD) சார்ந்த விவரங்களில்‌ திருத்தம்‌ இருப்பின்‌ விண்ணப்பதாரர்‌ செலுத்திய கட்டணத் தொகையில்‌ ஏற்படும்‌ மாற்றங்களுக்கு விண்ணப்பதாரரே பொறுப்பாவார்‌.
  1. விண்ணப்பத்தில்‌ கட்டணத் தொகையில்‌ திருத்தம்‌ செய்ய வேண்டியிருப்பின்‌ கூடுதலாக கட்டணம்‌ செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்‌, தேர்வுக்கான முழு கட்டணத் தொகையினை மீண்டும்‌ செலுத்த வேண்டும்‌.
  1. விண்ணப்பத்தில்‌ கட்டணத் தொகையில்‌ திருத்தம்‌ செய்யும்‌போது குறைவாக கட்டணம்‌ செலுத்த வேண்டியிருப்பின்‌, விண்ணப்பதாரர்‌ ஏற்கனவே செலுத்திய கட்டணத்தின்‌ மீதித்தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது.

மேலும்‌, இனிவரும்‌ காலங்களில்‌ திருத்தம்‌ தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும்‌ பரிசீலனை செய்யப்படமாட்டாது.

இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget