(Source: Poll of Polls)
Group 4 vacancies: “ஆட்சிக்கு வருவதற்காக சொன்ன அத்தனையும் பொய்யா?” குரூப் 4 தேர்வர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி..!
TNPSC Group 4 vacancies: #Increase_Group4_Vacancy என்ற ஹாஸ்டாக் ட்விட்டர் வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது
டி.என்.பி.எஸ்.சி குருப் 4 தேர்வு மூலம் 20 ஆயிரம் காலியிடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில் வெறும் 6 ஆயிரத்து 244 இடங்களை மட்டுமே நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வருவதற்காக சொன்னதெல்லாம் பொய்யா?
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ”ஆட்சிக்கு வருவதற்காக சொன்னது அத்தனையும் பொய்" என்ற ரீதியில், கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்ட விடியா திமுக அரசு, அனைத்து தரப்பு மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. "தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர்" என்றும் தேர்தல் வாக்குறுதியை அள்ளி வீசிவிட்டு, தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தொகுப்பில் 20000 இடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில், நடப்பாண்டில் அதில் வெறும் கால் பங்கான 6244 இடங்களை மட்டுமே நிரப்புவதன் மூலம் இத்தேர்வைக் கனவாகக் கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிக்கும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம் என தெரிவித்துள்ளார்
பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் - எடப்பாடி
போட்டித் தேர்வு மாணவர்களின் ஒருமித்த கோரிக்கையினைக் கருத்திற்கொண்டு, நடப்பாண்டு குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்குமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” என அந்த சமூக வலைதள பதிவில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வருவதற்காக சொன்னது அத்தனையும் பொய்" என்ற ரீதியில், கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்ட விடியா திமுக அரசு, அனைத்து தரப்பு மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) September 19, 2024
"தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம்… pic.twitter.com/g1Q3bs5rRk
சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் கோரிக்கை
2023ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று தேர்வை எழுதிய தேர்வர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். இதனால் #Increase_Group4_Vacancy என்ற ஹாஸ்டாக் ட்விட்டர் வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது
கண்டுக்கொள்ளுமா அரசு
அரசு வேலை என்பது எப்போதும் ஒரு கனவாகவே இருக்கும் நிலையில், அதற்காக கடினமாக உழைத்து, படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.பி மூலம் நடத்தப்படும் தேர்வுகளே அந்த கனவை அடையும் இலக்காக இருக்கிறது. இந்நிலையில், குருப் 4 தேர்வு பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்ற தேர்வர்களின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.