மேலும் அறிய

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 46,534 இடங்கள் நிரப்பப்படும். இவை 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் நிரப்பப்படும். 17,591 இடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்.

தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ’’நமது அரசு அமைதியான, வலிமையாக அரசாகத் திகழ்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 46,534 இடங்கள் நிரப்பப்படும். இவை 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் நிரப்பப்படும்.

அதேபோல 17,591 இடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும். காலியாக இருக்கும் பிற பணியிடங்களையும் சேர்த்து, மொத்தம் 75 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இவ்வாறு நிரப்பப்படும்’’ என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவை 110 விதிகளின்கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த தேர்தலைப் பற்றி அல்ல; அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்கும் அரசு

மேலும் ’’கல்வி மூலமாக அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்கி வருகிறோம். அதற்காகவே புதுமைப் பெண், நான் முதல்வன், தமிழ் புதல்வன் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால்தான் நமது அரசு அடுத்த தேர்தலைப் பற்றி யோசிக்கும் அரசல்ல. அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்கும் அரசு.

65 ஆயிரம் பேருக்கு அரசுப்பணி நியமனம்

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து 3 ஆண்டுகளில் பல்வேறு அரசுத் தேர்வு வாரியங்கள், முகமை மூலம் 32 ஆயிரத்து 774 பணியிடங்கள் நிரப்பப்பட்டு, நேரடிப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன. அதேபோல்‌, உள்ளாட்சி அமைப்புகள்‌, அரசுத்‌ துறை நிறுவனங்கள்‌ போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில்‌ 32 ஆயிரத்து 709 இளைஞர்கள்‌ பணிநியமனம்‌ பெற்றனர்‌.

மொத்தம்‌ 65 ஆயிரத்து 483 இளைஞர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில்‌ அரசுப்‌ பணி வழங்கப்பட்டது. அரசுப் பணி மட்டுமல்லாது பல்வேறு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூலமும் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில்‌ கடந்த 3 ஆண்டுகளில்‌ அமைப்பு சார்ந்த தனியார்‌ துறைகளில்‌ உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள்‌ குறித்த புள்ளி விவரங்கள்‌ ஒன்றிய அரசின்‌ தொழிலாளர்‌ வைப்பு நிதி நிறுவனத்தின்‌ மூலம்‌ பெறப்பட்டது. இது ஒன்றிய அரசின்‌ தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்பு அமைச்சகத்தின்கீழ்‌ செயல்படும்‌ ஒர்‌ அமைப்பாகும்‌. இந்த நிறுவனத்தின்‌ தரவுகளின்படி, கடந்த 3 ஆண்டுகளில்‌ மொத்தம்‌ 77 லட்சத்து 78 ஆயிரத்து 999 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களுக்குத்‌ தொழிலாளர்‌ வைப்பு நிதி கணக்குகளும்‌ தொடங்கப்பட்டுள்ளன.

5.08 லட்சம் பேருக்கு வேலை

இதுமட்டுமின்றி, “நான்‌ முதல்வன்‌ திட்டம்‌” மூலமாகச்‌ சிறப்பு பயிற்சிகள்‌ தரப்பட்டு வருகிறது. இதன்‌ மூலம்‌ படித்த இளைஞர்களின்‌ திறன்கள்‌ மேம்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின்‌ மூலமாக இதுவரை, 3 இலட்சத்து 6 ஆயிரத்து 459 நபர்களுக்குத்‌ தனியார்‌ துறைகளில்‌ வேலைவாய்ப்புகள்‌ ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல, தமிழ்நாடு அரசின்‌ தொழிலாளர்‌ நலத்துறையின்‌ மூலமாக நடத்தப்பட்ட சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள்‌ மூலமாக கடந்த 3 ஆண்டுகளில்‌ 2 இலட்சத்து ஆயிரத்து 996 இளைஞர்களுக்கு தனியார்‌ நிறுவனங்களில்‌ வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்‌ தரப்பட்டது. இந்த இரண்டையும்‌ சேர்த்து, தமிழ்நாடு அரசின்‌ முயற்சியினால்‌, கடந்த 3 ஆண்டுகளில்‌ மட்டும்‌ மொத்தம்‌ 5 இலட்சத்து 8 ஆயிரத்து 55 தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரி 2026-க்குள்‌, அதாவது இன்னும்‌ 18 மாதங்களுக்குள்‌ பல்வேறு அரசுப்‌ பணியிடங்களுக்காக, தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ மூலமாக 17 ஆயிரத்து 595 பணியிடங்களும்‌, ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலமாக 19 ஆயிரத்து 260 ஆசிரியப்‌ பணியிடங்களும்‌, மருத்துவப்‌ பணியாளர்‌ தேர்வு வாரியம்‌ மூலமாக 3 ஆயிரத்து 041 பணியிடங்களும்‌, தமிழ்நாடு சீருடைப்‌ பணியாளர்‌ தேர்வு வாரியம்‌ மூலமாக 6 ஆயிரத்து 688 பணியிடங்களும்‌ நிரப்பப்படும்‌. மொத்தம்‌ 46 ஆயிரத்து 584 பணியிடங்கள்‌ நிரப்பப்படும்‌.

இது தவிர, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர்‌ வழங்கல்‌ துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில்‌
காலியாக இருக்கக்கூடிய 30 ஆயிரத்து 219 பணியிடங்களும்‌ நிரப்பப்படும்‌. இவற்றை மொத்தமாக சேர்த்துப்‌ பார்க்கையில்‌, 75,000-க்கும்‌ மேற்பட்ட அரசுப்‌ பணியிடங்கள்‌ வரும்‌ 2026-ம்‌ ஆண்டு ஜனவரி மாதத்திற்குள்‌ நிரப்பப்படும்‌’’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget