மேலும் அறிய

Asst Professors: மிஸ் பண்ணிடாதீங்க...உதவிப் பேராசிரியர் பணிக்கு கடைசி வாய்ப்பு! டிஆர்பி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அதேபோல விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வது குறித்த படிப்படியான வழிமுறைகளையும் டிஆர்பி வெளியிட்டுள்ளது. 

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2708 உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை 16.10.2025 அன்று வெளியிடப்பட்டு, விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 10.11.2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் 30.11.2025 க்குள் பணிஅனுபவ சான்றிதழ்களை மட்டும் பதிவேற்றம் செய்யவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நவம்பர் 13 கடைசி

இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option) மேற்கொள்ள அவகாசம் கோரியதின் அடிப்படையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகள் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option) மேற்கொள்ள விரும்பினால் 11.11.2025 முதல் 13.11.2025 வரை திருத்தம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. 13.11.2025 வரை தேர்வர்களின் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட விவரங்களை மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிக்கும். 13.11.2025-க்கு பிறகு மாற்றங்கள் கோரி வரப்பெறும் கோரிக்கைகள் பரிசீலிக்க இயலாது.

மேலும், விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் (Edit Option) மேற்கொள்ளும்போது கீழ்க்காணும் வழிமுறைகளை கவனமாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது.

  1. இணையவழி விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
  2. விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை திருத்தம் செய்து புதுப்பித்தவுடன், கடைசி பக்கத்தில் உள்ள சமர்ப்பி" (Submit) பொத்தானை அழுத்தி விண்ணப்பத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை / திருத்தங்களை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் செய்யப்பட்ட மாற்றங்கள் / திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  3. கடைசியாக உள்ள "சமர்ப்பி" (Final Submit) பொத்தானை அழுத்தி உறுதி செய்யவில்லை எனில், அன்னாரின் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. முந்தைய விண்ணப்பம் கணக்கில் விவரங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
  4. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களில் மாற்றங்களை செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்தபின் வேறு எந்த மாற்றமும் ஏற்றுக்கொள்ள இயலாது.
  5. திருத்தம் (Edit Option) மேற்கொள்ளும் விண்ணப்பதாரர்கள், திருத்தம் மேற்கொள்ளும் குறிப்பிட்ட இடத்தில் (Panel) உரிய திருத்தம் மேற்கொண்ட பின்பு தொடர்ச்சியாக அடுத்த பகுதிகளையும் சரிபார்க்க வேண்டும். ஏனெனில் சில பகுதிகளில் (Fileds) திருத்தம் செய்யும்பொழுது மற்ற பகுதிகளிலும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும்.
  6. திருத்தம் (Edit Option) செய்த பின்னர் Print Preview Page சென்று அனைத்தும் சரியாக உள்ளபட்சத்தில் Declaration ல் ஒப்புதல் அளித்த பின்னரே தங்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.
  7. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை எனில் முந்தைய தரவுகளே பரிசீலிக்கப்படும்.
  8. விண்ணப்பதாரர்கள் கைபேசி எண் (Mobile No) மின்னஞ்சல் முகவரி (Email ID) ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய இயலாது.
  9. இனம் (Community) மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PWD) சார்ந்த விவரங்களில் திருத்தம் இருப்பின் விண்ணப்பதாரர் செலுத்திய கட்டணத் தொகையில் ஏற்படும் மாற்றங்களுக்கு விண்ணப்பதாரரே பொறுப்பாவார்.
  10. விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்ய வேண்டியிருப்பின் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர், தேர்வுக்கான முழுகட்டணத் தொகையினையும் மீண்டும் செலுத்த வேண்டும்.
  11. விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்யும்போது குறைவாக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பின், விண்ணப்பதாரர் ஏற்கனவே செலுத்திய கட்டணத்தின் மீதித்தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது.

மேலும், 13.11.2025க்குப் பின்னர் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டாது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Planet Parade: நாளை வானில் அதிசயம்! எந்தெந்த கிரகங்களின் அணிவகுப்பு? எப்படி, எந்த நேரத்தில் காணலாம்? அரிய வாய்ப்பு!
Planet Parade: நாளை வானில் அதிசயம்! எந்தெந்த கிரகங்களின் அணிவகுப்பு? எப்படி, எந்த நேரத்தில் காணலாம்? அரிய வாய்ப்பு!
பிரம்மாண்ட அறிவியல் திருவிழா! மாணவர்கள் பங்கேற்க அழைப்பு! போட்டி, பரிசுகள்.. விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்!
பிரம்மாண்ட அறிவியல் திருவிழா! மாணவர்கள் பங்கேற்க அழைப்பு! போட்டி, பரிசுகள்.. விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்!
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
CBSE: 'நீதித்துறையில் ஊழல்'- சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திற்கு தடை: உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!
CBSE: 'நீதித்துறையில் ஊழல்'- சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திற்கு தடை: உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
முதல் ரஞ்சி.. ஜம்மு காஷ்மீரை தலைநிமிர வைத்த பராஸ் டோக்ரா! 25 வருட உழைப்புக்கு அங்கீகாரம்!
முதல் ரஞ்சி.. ஜம்மு காஷ்மீரை தலைநிமிர வைத்த பராஸ் டோக்ரா! 25 வருட உழைப்புக்கு அங்கீகாரம்!
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
Embed widget