மேலும் அறிய

College Admission: கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட்.5 முதல் கலந்தாய்வு- கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு வரும் 5-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

முன்னதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறும்போது, சிபிஎஸ்இ முடிவுகள் வெளியாகும் நாளில் இருந்து அடுத்த 5 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான இடங்கள் ஏற்கெனவே 25 சதவீத அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைக்க அரசு பெரும்பாலும் முயற்சி செய்யும்'' என்று தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில்‌ உள்ள 163 அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர்‌ சேர்க்கைக்கான (2022-2023) விண்ணப்பங்களை https://tngasa.org/, https://tngasa.in/என்ற இணையதள முகவரிகளில்‌ பதிவு செய்தனர்.

இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள்‌ கல்லூரி உதவி மையங்கள் மூலம்‌ விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டது. இம்மையங்களின்‌ பட்டியல்‌ மேற்குறித்த இணையதள முகவரியில்‌ வெளியிடப்பட்டது. அனைத்து மையங்களிலும்‌ போதிய அளவில்‌ கொரோனா தடுப்பு மற்றும்‌ பாதுகாப்பு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டன.

College Admission: கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட்.5 முதல் கலந்தாய்வு- கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

விண்ணப்பக்‌ கட்டணம்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் ‌Credit Card/ Debit Card/ Net Banking  மூலம்‌ 
இணையதள வாயிலாகச் செலுத்தினர். இணையதள வாயிலாகக்‌ கட்டணம்‌ செலுத்த இயலாத மாணாக்கர்கள்‌ கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில்‌ “The Director, Directorate of Collegiate Education, Chennai - 6” என்ற பெயரில்‌ வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும்‌ செலுத்தனர்.

இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 7 கடைசித் தேதியாக இருந்தது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, ஜூலை 27 கடைசித் தேதியாக இருந்தது. இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்தனர்.

இந்நிலையில், 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு வரும் 5-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு இ-மெயில் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் எப்போது தொடங்கப்படும் என்ற விவரம் பின்னர் வெளியிடப்படும் என்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget