மேலும் அறிய

காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்ற பட்டமளிப்பு விழா!

காஞ்சிபுரம், ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் டிசம்பர் 22 மற்றும் 23, 2025 அன்று தான் 19-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவை வெற்றிகரமாக நடைபெற்றது. 

காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் செயல்பட்டு வரும் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் 19ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

19வது பட்டமளிப்பு விழா

தமிழ்நாட்டில் கடந்த 22 ஆண்டுகளாக கல்வி பணியாற்றி வரும் நிகர்நிலைப்பல்கலைக்கழகமான மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (MAHER), அதன் ஒரு அங்கமான காஞ்சிபுரம், ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் டிசம்பர் 22 மற்றும் 23, 2025 அன்று தான் 19-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவை வெற்றிகரமாக நடைபெற்றது. 

இந்த பட்டமளிப்பு விழாவிற்கு மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் திருமதி. ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அவரது தொலை நோக்குப்பார்வையானது நிறுவனத்தின் நிலையான வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளது. அந்நிறுவனத்தின் தலைமை புரவலர் திருமதி. கோமதி. ஆர், இணை வேந்தர் திரு. ஆகாஷ் பிரபாகர், துணை வேந்தர், பேராசிரியர். டாக்டர் C.ஸ்ரீதர், சார்பு துணை வேந்தர் பேராசிரியை டாக்டர் C.கிருத்திகா மற்றும் பதிவாளர் பேராசிரியை. டாக்டர். சுரேகா வரலட்சுமி ஆகிய உயர் அதிகாரிகளின் முன்னிலை வகித்தனர். 

MAHER பயணம்

வரவேற்பு உரையில், திருமதி ஜெயந்தி ராதாகிருஷ்ணன், 2004 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து MAHER இன் பயணத்தைப்பற்றிப் பேசினார். மேலும் கல்வி, ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் கடந்த ஆண்டில் முன்னேற்றத்தை எடுத்துரைத்தார். நிறுவனர் வேந்தர் திரு. ஏ. என். ராதாகிருஷ்ணன் அவர்களின் MAHER அடைந்த குறிப்பிடத்தக்க தொலைநோக்குப்பார்வையை அவர் அன்புடன் நினைவு கூர்ந்தார். 

தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய இந்நிறுவனத்தின் இணை வேந்தர் திரு. ஆகாஷ் பிரபாகர் சமூகத்தை மாற்றும் வல்லமை கொண்ட கல்வி எனும் சிறப்பு மிக்க ஆயுதத்தை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். 2024-25 கல்வியாண்டிற்கான ஆண்டு அறிக்கையை துணைவேந்தர் வழங்கினார். இதில் அங்கீகாரம் மற்றும் தரவரிசையில் நிறுவனத்தின் சாதனைகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர் சாதனைகள், மாணவர்கள் முன்னேற்றம், சமூகப் பொறுப்பு முயற்சிகள் மற்றும் சமூகம், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட நலத்திட்ட நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்தார். 

சிறப்பு விருந்தினர்கள்

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான புகழ்பெற்ற கண் மருத்துவர் பேராசிரியர். டாக்டர். அமர் அகர்வால், பட்டமளிப்புவிழாவின் முதல் நாளில் (22.12.2025) விருந்தினராகக் கலந்து கொண்டார். பட்டமளிப்பு விழா உரையில், வாழ்நாள் முழுவதும் கற்றலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பட்டதாரிகள் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் ஒழுக்கம் மூலம் வெற்றியைத் தொடர ஊக்குவித்தார்.

2 ஆம் நாள் சிறப்பு விருந்தினராக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் இயக்குநரும் விஞ்ஞானியுமான பேராசிரியர் டாக்டர் மனோஜ் முர்ஹேகர், (Director and Scientist 'G' at the Indian Council of Medical Research National Institute of Epidemiology) கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த விழாவின்போது, வேலூர், கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரியின் செல் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் நிஹால் தாமஸ் அவர்களுக்கு நீரிழிவு நோய்த் துறையில் அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, அறிவியல் முனைவர் பட்டம் (ஹானரிஸ் காசா) வழங்கப்பட்டது.

பட்டமளிப்பு விழாவில், இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டமாணவர்கள் உட்பட மொத்தம் 1,257 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கூடுதலாக, 103 சிறந்த மாணவர்களுக்கு சிறந்த கல்வி செயல்திறனை அங்கீகரிக்கும் விதமாக பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. பழங்குடி மாணவர்களுக்கு கல்வி கற்பதில் தன்னலமற்ற அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் விதமாக, தமிழ்நாடு, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியின் தலைமையாசிரியர் திரு. எஸ். அய்யப்பன் அவர்களுக்கு சிறந்த மனிதநேய சேவைக்கான "ஜெயந்தி ராதாகிருஷ்ணன் விருதினை" மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கியது.

மேலும், அந்நிறுவனத்தின் 10 புகழ்பெற்ற முன்னாள் மாணவர்களுக்கு குறிப்பிடத்தக்க தொழில்முறை சாதனைகளுக்காகவும் சமூகத்திற்கான பங்களிப்புக்காகவும் "கோமதிராதாகிருஷ்ணன் சிறப்பு முன்னாள் மாணவர் விருது 2025" வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த ஆண்டு "ஆகாஷ் பிரபாகர் சிறப்பு விளையாட்டு வீரர் விருது" நிறுவப்பட்டது, இது மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இறுதி ஆண்டு பி.பி.ஏ. மாணவி செல்வி. ஷைனி கிளாட்சியாவுக்கு மாநில மற்றும் தேசிய அளவிலான தடகள நிகழ்வுகளில் சிறந்து விளங்கியதற்காக வழங்கப்பட்டது.

பட்டமளிப்பு விழாவில் 4,000க்கும் மேற்பட்ட பெருமைமிக்க பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். புதிய பட்டதாரிகள் பட்டங்களைப் பெற்றதோடு, அவர்களின் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்மை, சேவை மற்றும் சிறந்து விளங்குவதற்கான மதிப்புகளை நிலைநிறுத்துவதாக உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
Embed widget