மேலும் அறிய

10th Original Certificate: 10-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஆக.18 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்: பெறுவது எப்படி?

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் பள்ளிகளிலேயே அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் பள்ளிகளிலேயே அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தனித் தேர்வர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரலில் நடைபெற்ற பொதுத் தேர்வு

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022- 23ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் 10ஆம் வகுப்பு படித்து முடித்தனர். இந்த மாணவர்களுக்கு, ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கிய 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 10 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

இதற்கிடையே 10ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் 1 லட்சம் மாணவர்கள் கலந்துகொள்ளவில்லை என்று அதிர்ச்சித் தகவல் வெளியானது. இதனால்தான் செய்முறைத் தேர்வுக்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதேபோல ஏப்ரல் 25 முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. இந்தப் பணி மே 3ஆம் தேதி வரை 7 வேலை நாட்களுக்கு நடைபெற்றது. 

இதைத் தொடர்ந்து பொதுத் தேர்வு முடிவுகளை, மே 19ஆம் தேதி காலை 11 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார்.

 91.39% மாணவர்கள் தேர்ச்சி

தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 88.16%, மாணவிகள் 94.64% தேர்ச்சி பெற்றனர்.

4,55, 017 மாணவிகள், 4,59,303 மாணவர்கள் என  மொத்தம் 9,14, 320 பேர் தேர்வு எழுதினர். இதில் 8,35, 614 பேர் தேர்ச்சி அடைந்தனர். மாணவர்கள் 4,04, 904 பேரும், மாணவிகள் 4,30,710 பேரும் தேர்ச்சி பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. மாணவர்களை விட மாணவிகள் 6.50% அதிகம் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக இருந்தது. 

அதேபோல பெரம்பலூர் மாவட்டம் 97.67% பெற்று முதல் இடத்திலும் சிவகங்கை மாவட்டம் 97.53% பெற்று இரண்டாம் இடத்தையும் விருதுநகர் மாவட்டம் 96.22% பெற்று மூன்றாம் இடத்தையும் கன்னியாகுமரி மாவட்டம் 95.99% பெற்று நான்காம் இடத்தையும் தூத்துக்குடி மாவட்டம் 95.58 % பெற்று ஐந்தாம் இடத்தையும் பிடித்தது.

ஆக.18 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

இந்த நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் பள்ளிகளிலேயே அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 18 காலை 10 மணி முதல், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மதிப்பெண் சான்றிதழை வழங்க உள்ளனர். 

தனித் தேர்வர்களுக்கு எப்படி?

தனித் தேர்வர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் வாசிக்கலாம்: Rs 1000 for School Students: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாதாமாதம் ரூ.1000: திறனாய்வுத் தேர்வு அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி? 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
Medical Admissions Reservation : மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
CBSE 10ஆம் வகுப்பு: மும்மொழி கட்டாயம்! தேர்ச்சி பெறாவிட்டால் சான்றிதழ் இல்லை!
CBSE 10ஆம் வகுப்பு: மும்மொழி கட்டாயம்! தேர்ச்சி பெறாவிட்டால் சான்றிதழ் இல்லை!

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: குட்டீஸ்களுக்கு வார்னிங்..! முக்கிய உணவு பொருளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு - காரணம் என்ன?
குட்டீஸ்களுக்கு வார்னிங்..! முக்கிய உணவு பொருளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு - காரணம் என்ன?
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
Medical Admissions Reservation : மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
ரூ.80 ஆயிரம் தள்ளுபடி! குறையும் விலை- மாருதி பிரெஸ்ஸா புது மாடலுக்கு முன்னே குவியும் ஆஃபர்கள்
ரூ.80 ஆயிரம் தள்ளுபடி! குறையும் விலை- மாருதி பிரெஸ்ஸா புது மாடலுக்கு முன்னே குவியும் ஆஃபர்கள்
CM Vijay: லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
J Radhakrishnan IAS : ஜெ., கருணாநிதி ஆட்சியில் கெத்து காட்டிய ராதாகிருஷ்ணன் IAS.! டம்மியாக்கிய விஜய்- இது தான் காரணமா.?
ஜெ., கருணாநிதி ஆட்சியில் கெத்து காட்டிய ராதாகிருஷ்ணன் IAS.! டம்மியாக்கிய விஜய்- இது தான் காரணமா.?
விஜய் போட்ட ரகசிய திட்டம்.. பிளான் போட்டு சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.? ஆர்.பி.உதயகுமார் சொன்ன ஷாக் தகவல்
விஜய் போட்ட ரகசிய திட்டம்.. பிளான் போட்டு சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.? ஆர்.பி.உதயகுமார் சொன்ன ஷாக் தகவல்
Embed widget