மேலும் அறிய

விலைக்கு வாங்குவதாக கூறி காரை திருடிச்சென்ற இளைஞர் - புதுச்சேரியில் அதிர்ச்சி

புதுச்சேரியில் விலைக்கு வாங்குவதாக கூறி ஓட்டிப்பார்த்த போது காரை திருடிச்சென்ற வாலிபர் கைது.

புதுச்சேரியில் விலைக்கு வாங்குவதாக கூறி ஓட்டிப்பார்த்த போது காரை திருடிச்சென்ற வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.  லாஸ்பேட்டை சீனுவாசன் கவுண்டர் வீதியை சேர்ந்தவர் குமரன் (வயது 41). டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவர் தனக்கு சொந்தமான கார் ஒன்றை விற்பனை செய்வதற்காக ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்த நபர் ஒருவர், குமரனை தொடர்பு கொண்டு காரை விலை பேசினார். அப்போது அந்த காரை தான் வாங்கிக் கொள்வதாகவும் கூறினார். நேற்று மதியம் லாஸ்பேட்டைக்கு அந்த நபர், காரை ஓட்டிப்பார்க்க வேண்டும் என்று குமரனிடம் கூறினார். 

இதையடுத்து குமரன் அந்த நபரிடம் கார் சாவியை கொடுத்து அவருடன் சென்றார். அந்த நபர், காரை கிளப்பிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் சென்றார். புதுவை எல்லை அருகே சென்றபோது அவர் சாலையோரம் இருந்த மரத்தில் லேசாக மோதி வேண்டுமென்றே விபத்து ஏற்படுத்தி காரை நிறுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த குமரன் கீழே இறங்கி காரை பார்க்க சென்றார். அந்த சமயத்தில் அந்த நபர் காரை வேகமாக ஓட்டிக்கொண்டு தப்பிச்சென்றார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த குமரன், இதுபற்றிலாஸ்பேட்டை காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தார். உடனே காவல் ஆய்வாளர் செந்தில்குமார், சப்- இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் தமிழக போலீசார் உஷார்படுத்தினர். மேலும், லாஸ்பேட்டை போலீசாரும் அந்த காரை தேடிச்சென்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் போலீசார் அந்த வழியாக வந்த காரை மடக்கி பிடித்தனர். காரை ஓட்டிவந்த நபரை கைது செய்து லாஸ்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர் கேரள மாநிலம் குருவாயூரை சேர்ந்த முகமது அஸ்லாம் (24) என்பது தெரியவந்தது. இவர் மீது தமிழகம், புதுச்சேரியில் இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

11ஆண்டுகளுக்குப் பின் ரசிகர்களை சந்தித்த அஜித்... மும்பை டூ திருச்சி நடந்தது என்ன?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Tamil Nadu Budget 2026 LIVE: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
TN Budget 2026: மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
Embed widget