நண்பர்கள் பெயரில் நயவஞ்சகர்கள்! இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை – வெளியான வீடியோவால் ஷாக்!
மாகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தனது நண்பரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவm அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தனது நண்பரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவm அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் தனது நண்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், மேலும் இருவர் அந்தக் காட்சியைப் படம்பிடித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை பிவாண்டி காவல்துறையினர், பாலியல் வன்கொடுமைக்காக அந்தப் பெண்ணின் 22 வயது ஆண் நண்பர் ஒருவரையும் பெண் தோழி ஒருவரையும் தாக்குதலைப் படம்பிடித்த மற்றொரு நபரையும் கைது செய்ததாக தெரிவித்தனர்.
கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர், மதியம் தன்னுடன் நடைப்பயிற்சிக்கு வருமாறு அந்த 19 வயது இளம்பெண்ணை வற்புறுத்தியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை ஒரு லாட்ஜுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
மற்ற இரண்டு குற்றவாளிகளும் இந்த செயலை படம்பிடித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். எனவே அவர்களையும் கண்டறிந்துள்ளதாக போலீஸ் அதிகாரி கூறினார்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண் தாக்குதல் நடந்த ஒரு மாதத்திற்குப் பிறகு போலீசில் புகார் அளித்ததாக அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். நண்பர்களாலேயே தோழிக்கு நேர்ந்த கொடுமை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதேபோல், மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் தனது பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தையல்காரரான 21 வயது நபர், பிப்ரவரி 8 ஆம் தேதி கல்வா பகுதியில் உள்ள பாஸ்கர் நகரில் உள்ள தனது வீட்டிற்கு சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார். அவர் அந்த சிறுமியின் வாயில் ஒரு துணியை வைத்து திணித்து, தகாத முறையில் தொட்டதாக தெரிகிறது.
பின்னர் சிறுமி இந்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பெண்ணின் தாயார் போலீசில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த தையல்காரரை கைது செய்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

