மேலும் அறிய

ஒரு நிமிடத்தில் லேப்டாப் மாயம்... குளிக்கச் சென்ற நேரத்தில் கைவரிசை

மாணவர்கள் தங்கியிருந்த அறையில் லேப்டாப் திருட்டு – சி.சி.டி.வி காட்சிகள் வெளியீடு, போலீசார் விசாரணை

கோவை சரவணம்பட்டி பகுதியில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த அறைக்குள் புகுந்து மர்ம நபர்கள் லேப்டாப் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி, மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வையாபுரி நகரைச் சேர்ந்த சித்தார்த் என்பவர், சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் குரும்பபாளையம் பகுதியில் தனது நண்பர்கள் ஏழு பேருடன் சேர்ந்து ஒரு வாடகை அறையில் தங்கி படித்து வந்தார்.

மாணவர்கள் தங்கிய அறையில் துணிகரம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, சித்தார்த் உடற்பயிற்சிக்குச் செல்லத் தயாராகி, அறையின் முன்பக்க கதவை திறந்தபடியே வைத்து குளியலறைக்குச் சென்றுள்ளார். அந்த நேரத்தில் அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள், திறந்து இருந்த கதவு வழியாக அறைக்குள் நுழைந்து, அங்கு இருந்த லேப்டாப் பையை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

சிறிது நேரத்திற்கு பிறகு குளித்து வந்த சித்தார்த், லேப்டாப் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தபோது, இரண்டு நபர்கள் சாவகாசமாக அறைக்குள் நுழைந்து லேப்டாப் பையை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

இதுகுறித்து சித்தார்த் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். கோவை நகரில் பல்வேறு பகுதிகளில் வெளியூர் மாணவர்கள் அதிக அளவில் தங்கி படித்து வருவதால், அவர்களை குறிவைத்து இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

மாணவர்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அறை கதவுகளை முறையாக பூட்டிக் கொள்ள வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தாய் கீதாவை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகள்.. சிக்கியது எப்படி? விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
தாய் கீதாவை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகள்.. சிக்கியது எப்படி? விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
உல்லசமாக இருக்க சென்ற ஜோடியை வெட்டிக்கொன்ற தவெக நிர்வாகி.. ஏன் கொலை செய்தேன்? - சொன்ன அதிர்ச்சி காரணம்
உல்லசமாக இருக்க சென்ற ஜோடியை வெட்டிக்கொன்ற தவெக நிர்வாகி.. ஏன் கொலை செய்தேன்? - சொன்ன அதிர்ச்சி காரணம்
தனிஷ்க் கொள்ளை நிஷாந்த்: சிரித்தபடி சிறைக்கு; டிச.4 வரை நீதிமன்ற காவல்!
தனிஷ்க் கொள்ளை நிஷாந்த்: சிரித்தபடி சிறைக்கு; டிச.4 வரை நீதிமன்ற காவல்!
ஆண், பெண் கொடூரமாக வெட்டிக் கொலை.. பட்டப்பகலில் நடந்த இரட்டைக் கொலையால் மக்கள் அச்சம்
ஆண், பெண் கொடூரமாக வெட்டிக் கொலை.. பட்டப்பகலில் நடந்த இரட்டைக் கொலையால் மக்கள் அச்சம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump: ”இந்தியாவை பாருங்கயா, இவ்ளோ வட்டிய போட்டா எப்படி” - அமெரிக்க ரிசர்வ் வங்கியுடன் ட்ரம்ப் மோதல்
”இந்தியாவை பாருங்கயா, இவ்ளோ வட்டிய போட்டா எப்படி” - அமெரிக்க ரிசர்வ் வங்கியுடன் ட்ரம்ப் மோதல்
Revanth Reddy: ”பாத்ததும் பத்திக்கிச்சு” 1750KM பைக்கில் பயணம் - தெலங்கானா CM ரேவந்த் ரெட்டியின் காதல் கதை
”பாத்ததும் பத்திக்கிச்சு” 1750KM பைக்கில் பயணம் - தெலங்கானா CM ரேவந்த் ரெட்டியின் காதல் கதை
Gold Rate Today: நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்! இன்றும் குறைந்த தங்கம்... சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold Rate Today: நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்! இன்றும் குறைந்த தங்கம்... சவரன் எவ்வளவு தெரியுமா?
Chennai Traffic Diversions: சென்னை வாகன ஓட்டிகளே.. தப்பி தவறி கூட அந்த பக்கம் போயிடாதீங்க.. போக்குவரத்தில் மாற்றம்!
Chennai Traffic Diversions: சென்னை வாகன ஓட்டிகளே.. தப்பி தவறி கூட அந்த பக்கம் போயிடாதீங்க.. போக்குவரத்தில் மாற்றம்!
TN Weather News: புஸ்ஸென போன அக்வான்..! உறைபனி வார்னிங், மழைக்கு வாய்ப்பு இருக்கா? தமிழக வானிலை அறிக்கை
புஸ்ஸென போன அக்வான்..! உறைபனி வார்னிங், மழைக்கு வாய்ப்பு இருக்கா? தமிழக வானிலை அறிக்கை
Scholarship: மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க! வங்கி கணக்கில் நேரடியாக ரூ.50,000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Scholarship: மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க! வங்கி கணக்கில் நேரடியாக ரூ.50,000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
December Car Launch: ஆண்டு இறுதியில் சம்பவமா? டிசம்பரில் அறிமுகமாக உள்ள 4 டயங்கரமான கார் மாடல்கள் - முழு விவரம்
ஆண்டு இறுதியில் சம்பவமா? டிசம்பரில் அறிமுகமாக உள்ள 4 டயங்கரமான கார் மாடல்கள் - முழு விவரம்
OM Box Office: ஓம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு..! சாதனை படைத்தாரா தனுஷ்? எத்தனை கோடிகள் தெரியுமா?
ஓம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு..! சாதனை படைத்தாரா தனுஷ்? எத்தனை கோடிகள் தெரியுமா?
Embed widget