WhatsApp: ஒரே ரூமில் தங்குவதில் காதலனுடன் பிரச்சினை! காதலியின் உயிரைப்பறித்த வாட்ஸ் அப்!
ஆத்திரம் அடைந்த காதலன்,காதலியின் நம்பரை வாட்ஸ் அப்பில் ப்ளாக் செய்துவிட்டு படுத்துவிட்டார்.
வாட்ஸ் அப்பில் காதலன் ப்ளாக் செய்துவிட்டதால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண் பர்ணாளி லோக்ரே. இவர் 27 வயதான இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவருமே 6 மாதங்களாக பரஸ்பர காதலை கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இருவருமே திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுள்ளனர். திருமண நிகழ்ச்சியை முடித்துகொண்டு இருவரும் திரும்பிய நிலையில் இரவில் காதலன் வீட்டில் தங்கிக்கொள்ள பர்ணாளி ஆசைப்பட்டுள்ளார். ஆனால் சூழ்நிலையைக் கருதி வீட்டில் தங்க முடியாது என காதலன் கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மனமுடைந்து தன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த பர்ணாளி காதலனுக்கு தொடர்ந்து போன் செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காதலன்,காதலியின் நம்பரை வாட்ஸ் அப்பில் ப்ளாக் செய்துவிட்டு படுத்துவிட்டார். மீண்டும் காதலன் வீட்டுக்கே திரும்பி வந்த காதலி வாட்ஸ் அப்பில் ப்ளாக் செய்தது ஏன் என சண்டையிட்டுள்ளார்.
பின்னர் காதலன் வீட்டிலேயே இருந்துள்ளார். காதலனின் நடவடிக்கையால் மனமுடைந்த காதலி அதே வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். உடலை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த காதலன் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காதலன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டதால் இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Also Read:Tomato price: சத்தமில்லாமல் உச்சத்தில் ஏறிய தக்காளி.. தலைசுற்ற வைக்கும் மார்க்கெட் விலை!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்