மேலும் அறிய

அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

ஓடும் அரசுப் பேருந்தில் வாலிபர் ஒருவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

" அரசு பேருந்தில் அரிவாள் வெட்டு "

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வழியாக திருப்பூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது கொளமஞ்சனூர் பகுதியில் உள்ள புத்து கோவிலில் கற்பூரம் ஏற்றுவதற்காக சிறிது நேரம் பேருந்தை நிறுத்தி உள்ளார் ஓட்டுநர். அப்போது பேருந்தில் பயணம் செய்த இருவர் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ஆனானந்தல் கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர் என்பவரை மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அதே வேளையில் இரு சக்கர வாகனத்தின் பின் தொடர்ந்து வந்த மேலும் சிலர் பேருந்தில் ஏறி தாக்குதலில் ஈடுபட்டு விட்டு தப்பிச் சென்றதாக தகவல் கூறப்படுகிறது.

" பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்பு "

இந்த திடீர் தாக்குதலால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்தபடி கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். சரமாரி அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்த சிவசங்கர் , 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து தண்டராம்பட்டு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தண்டராம்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் திருவண்ணாமலை , தண்டராம்பட்டு உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமரா , செல்போன் சிக்னல் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர்.

இந்த விசாரணையின் போது சிவசங்கருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரேகா என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும் , நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரேகாவும் சிவசங்கரும் ஊரை விட்டு ஓடி சென்று திருமணம் செய்து திருப்பூரில் வாழ்ந்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ரேகாவின் கணவர் ரகு மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து தாக்குதலை நடத்தியது தெரிய வந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

" 4 ஆண்டு முன்பு பகை "

அண்டம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ரகு , கண்ணக்குருக்கை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் , வேளானந்தல் கிராமத்தை சேர்ந்த ஆசைத் தம்பி மற்றும் மாதவன் , ஆடையூர் பகுதியை சேர்ந்த சுகுமார் ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார் சம்பவத்தின் பின்னணி குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையின் போது ரகுவின் மனைவி ரேகாவை நான்காண்டுகளுக்கு முன்பு சிவசங்கர் மூன்று மாத கைக் குழந்தையை விட்டு விட்டு அழைத்துச் சென்று திருமணம் செய்து திருப்பூரில் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சிவசங்கர் வழக்கு சம்பந்தமாக திருவண்ணாமலை நீதிமன்றத்திற்கு வந்து விட்டு மீண்டும் திருப்பூர் செல்வதற்காக திருவண்ணாமலையில் பேருந்தில் ஏறி பயணம் செய்தார்.

இதனை அறிந்த ரகு தனது நண்பர்களிடம் கூறி சிவசங்கரை பின் தொடர்ந்து சென்றனர். அவர் ஏறிய பேருந்தில் இரண்டு நபர்கள் ஏறி நோட்டமிட்டு கொண்டிருந்தனர். ஆளில்லாத இடத்தில் சிவசங்கரை வெட்டுவதற்காக திட்டம் தீட்டப்பட்டிருந்தது. ஆனால் திடீரென பேருந்து கோவில் அருகே நின்றதால் அங்கேயே வெட்டி விட்டு தப்பி சென்று விட்டோம் எனவும் , நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பகையின் காரணமாக வெட்டப்பட்டதாக போலீசாரிடம் கைது செய்யப்பட்ட நபர்கள் தெரிவித்தனர்.

மேலும் வெட்டு காயங்கள் அடைந்த இளைஞர் சிவசங்கர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். மேலும் கள்ளக் காதல் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அரசு பேருந்தில் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
'திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு ஜாமீன்’ நீதிமன்றம் சொன்ன கண்டிஷன்....!
'திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு ஜாமீன்’ நீதிமன்றம் சொன்ன கண்டிஷன்....!
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
" பேனர் வைப்பதில் தகராறு " ரியல் எஸ்டேட் அதிபர் பட்டப் பகலில் வெட்டிப் கொலை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Embed widget