Tiruvannamalai: பத்தே மாதம்... பெண் தற்கொலை: வரதட்சனை கொடுமை காரணமா? விசாரணை வளையத்தில் சிக்கும் கணவர் குடும்பம்!
கீழ்பென்னாத்தூர் பகுதியில் திருமணமாகி பத்து மாதங்கள் ஆகியுள்ள நிலையில் வரதட்சனை கொடுமை காரணமாக பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை - ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுக்கா உட்பட்ட வேடந்தவாடி அடுத்த காட்டுவனத்தம் கிராமத்தைச் சார்ந்த வடிவேலு வயது (29) என்பவருக்கும் துர்க்கம் கிராமத்தைச் சார்ந்த சண்முகசுந்தரிக்கும் வயது (25) கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணம் நடந்து முடிந்த மூன்றாவது மாதத்திலேயே வரதட்சணை கேட்டு அவருடைய மாமியார் கொடுமை படுத்தியுள்ளார். இதன் காரணமாக, சண்முகசுந்தரி தனது தந்தை வீட்டிற்கு வந்து உள்ளார். இந்நிலையில் இரு வீட்டு உறவினர்களும் சமரசம் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் சமாதானப்படுத்தி மீண்டும் கணவரிடம் சேர்ந்து வாழ அவருடைய வீட்டிற்கு வந்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து சண்முகசுந்தரியிடம் அவருடைய மாமியார் வீட்டில் மீண்டும் வரதட்சணை கொடுமை தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. அப்போது அவருடைய கணவரிடமும் மாமியாரிடமும் நீங்கள் என்னை கொடுமை படுத்த மாட்டீர்கள் என்று கூறிதான் என்னை சமாதானம் செய்து கூட்டி வந்திர்கள் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இருவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சண்முகசுந்தரி கடந்த 21ஆம் தேதி நிலத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை அறிந்த கணவர் வடிவேல், சண்முகசுந்தரியை திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். தொடர்ந்து சண்முகசுந்தரிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் திடிரென 26-ம் தேதி சண்முக சுந்தரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, சண்முகசுந்தரியின் தந்தை பாலு வரதட்சனை கொடுமையால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டது குறித்து மங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். வரதட்சணை கொடுமைக்கு காரணமான கணவர் வடிவேலு, மாமனார் நடேசன், மாமியார் சாரதாம்பாள், வடிவேலுவின் அக்கா காமாட்சி, மாமா திருவேங்கடம், அண்ணன் சங்கர் உள்ளிட்ட 6 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருமணமாகி பத்து மாதங்கள் ஆகியுள்ளதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours) State suicide prevention helpline – 104 (24 hours) iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm)