Watch Video : டோல்கேட் தடுப்புக்கம்பியை இடித்துத்தள்ளி தப்பிச்சென்ற 13 டிராக்டர்கள்...! மணல் கடத்தல் கும்பல் அட்டூழியம்..!
ஆக்ராவில் மணல் கடத்திச் சென்ற 13 டிராக்டர்கள் டோல்கேட் தடுப்பு கம்பியை இடித்துச் சேதப்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு ஆக்ரா அமைந்துள்ளது. ஆக்ராவில் இருந்து குவாலியர் செல்லும் நெடுஞ்சாலையில் ஜஜவ் டோல்கேட் அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஏராளமான மணல் திருட்டு கும்பல்கள் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், நேற்று சுங்கச்சாவடி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே டிராக்டர் ஒன்று வந்தது. அந்த டிராக்டர் முழுவதும் மணல் இருந்தது. அப்போது, சுங்கச்சாவடி பணியாளர்கள் அந்த டிராக்டர் ஓட்டுநரிடம் சுங்கக்கட்டணம் கேட்டுள்ளார்.
whose sport violating?
— Er Manish Rajak (@ManishCEO2) September 4, 2022
In UP's Agra, tractors laden with sand, most likely belonging to local sand mafia, storm the toll booth and pass through as booth workers try to stop them using sticks. In the 53 sec video, 13 tractors can be seen recklessly speeding through the toll plaza. pic.twitter.com/smAPbI0XPM
அதற்கு அந்த டிராக்டர் ஓட்டுனர் செலுத்த மறுப்பு தெரிவித்துள்ளார். பின்னர், டோல்கேட் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சுங்கச்சாவடியில் இருந்த தடுப்பையும் இடித்து தள்ளிவிட்டு டிராக்டரை எடுத்துக்கொண்டு கிளம்பியுள்ளார்.
மேலும் படிக்க : Crime: 3 இடங்களில் கத்திக்குத்து நடத்திய இரண்டு பேர்.. 10 பேர் பலி 15 பேர் காயம்.. கனடா கொடூர சம்பவத்தால் அதிர்ச்சி
அந்த நபர் சென்ற பிறகு, அந்த நபருக்கு பின்னால் வந்த சுமார் 12 டிராக்டர்கள் அதேபோல, சுங்கச்சாவடி தடுப்பை இடித்து தள்ளிவிட்டு சேதப்படுத்திவிட்டு கடந்து சென்றது. அந்த டிராக்டர்களை சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்கள் கையில் இருந்த கம்புகளால் அடித்து தடுக்க முற்பட்டனர். ஆனாலும், டிராக்டர்கள் அனைத்தும் சிறிதும் வேகத்தை குறைக்காமல் டோல்கேட்டை கடந்து சென்று கொண்டே இருந்தது.
இந்த காட்சிகள் அனைத்தும் டோல்கேட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு காரணமான மணல் மாபியா கும்பல் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க : Pakistan Flood : நாட்டையே புரட்டிப்போட்ட பெருவெள்ளம்.. பாகிஸ்தானில் 1300 பேர் உயிரிழப்பு.. 5 லட்சம் பேருக்கு இந்த கதி!!
மேலும் படிக்க : Rohingya : விஸ்வரூபம் எடுக்கும் ரோஹிங்கியா விவகாரம்...இந்தியாவின் உதவியை நாடும் வங்கதேசம்...என்ன நடக்கிறது?