Crime: 3 இடங்களில் கத்திக்குத்து நடத்திய இரண்டு பேர்.. 10 பேர் பலி 15 பேர் காயம்.. கனடா கொடூர சம்பவத்தால் அதிர்ச்சி
மூன்று இடங்களில் நடைபெற்ற கத்தி குத்து சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளில் அடிக்கடி பொதுவெளியில் துப்பாக்கிச் சுடு மற்றும் கத்தி குத்து உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடப்பது வழக்கம். அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. மூன்று இடங்களில் ஒரே நபர்கள் நடத்திய கத்தி குத்து சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டிலுள்ள சாஸ்கட்சவான் மாகாணத்தில் நேற்று சில இடங்களில் கத்தி குத்து சம்பவம் நடைபெற்றுள்ளது. அதன்படி சாஸ்கட்சவான் மாகாணத்திலுள்ள வெல்டன் கிராமம், வடகிழக்கு சாஸ்கட்சவான் மற்றும் ஜேம்ஸ் க்ரீ நேஷன் ஆகிய 3 இடங்களில் கத்தி குத்து சம்பவம் நடைபெற்றுள்ளது.
Ten people were killed and 15 injured in stabbings in the Canadian province of Saskatchewan. Police are looking for two suspects. #EmergencyAlert pic.twitter.com/y424CY6ghz
— #Blackinthe416🌐 (@Blackinthe416) September 5, 2022
இந்தச் சம்பவங்களில் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 15க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த மூன்று இடங்களிலும் ஒரே நபர்கள் தான் குற்ற சம்பவத்தை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த குற்ற செயலை செய்தவர்கள் தொடர்பாக காவல்துறை படங்களை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி டெமியன் சண்டர்சென் மற்றும் மையில்ஸ் சண்டர்சென் ஆகிய இருவரும் கத்தி குத்து சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் கத்தி குத்து சம்பவத்தில் ஈடுபட்ட பின்பு ஒரு கருப்பு நிற நிஷான் காரில் தப்பி சென்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டீன் டூரோடோ கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர், “கனடாவில் நடைபெற்றுள்ள கத்தி குத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்த நபர்களின் குடும்பத்திற்கு என்னுடைய அறுதலை தெரிவிக்கிறேன். இந்தச் சம்பவம் தொடர்பாக அனைத்து விஷயங்களையும் உற்று நோக்கி பார்த்து வருகிறோம்.
We are closely monitoring the situation, and urge everyone to follow updates from local authorities. Thank you to all the brave first responders for their efforts on the ground.
— Justin Trudeau (@JustinTrudeau) September 4, 2022
அங்கு இருக்கும் உள்ளூர் அதிகாரிகளிடம் தகவல்களை பெற்று வருகிறோம். இந்தச் சம்பவத்தில் முதலில் களத்தில் இறங்கி பணி செய்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்” எனக் கூறியுள்ளார். மூன்று கத்தி குத்து சம்பவங்களிலும் ஒரு சிலர் குறி வைத்து குத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அத்துடன் சிலரை செல்லும் வழியில் அவர்கள் குத்தி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளை இருவரை பிடிக்க காவல்துறையினர் முயற்சி எடுத்து வருகின்றனர். ஒரே மாகாணத்தில் மூன்று இடங்களில் நடைபெற்ற கத்தி குத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.