வீட்டில் அடைத்து வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம்.. இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
விழுப்புரம் : கோட்டக்குப்பம் அருகே நண்பர் வீட்டில் அடைத்து வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள கீழ் புத்துப்பட்டில் இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம் உள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த முகாமை சேர்ந்த ஒரு பெண் கடந்த 4-ந் தேதி விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் 11-ம் வகுப்பு படித்து வரும் தனது மகளை திடீரென காணவில்லை. எங்கு தேடியும் அவரைப் பற்றி தகவல் கிடைக்கவில்லை. எனவே எனது மகளை கண்டுபிடித்து தரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
TNSAMB அறிவிப்பு: தமிழக அரசு வேலை; 10-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்!
இந்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ரேவதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்திய போது மாயமானதாக கூறப்பட்ட சிறுமி திண்டிவனத்தில் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த சிறுமியை மீட்டனர். சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கீழ் புத்துப்பட்டு முகாமில் வசித்து வரும் தினேஷ்வரன் என்ற வாலிபர் அந்த சிறுமியை கடத்திச் சென்று திண்டிவனத்தில் உள்ள தனது நண்பரின் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.
4 கிராம் கம்மலுக்காக 70 வயது மூதாட்டி கொலை - காதை அறுத்து கொலை செய்த 3 சிறுவர்கள் கைது
அதன் பேரில் தினேஷ்வரனை கைது செய்த போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விழுப்புரம் மத்திய சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட சிறுமிக்கு விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
போக்சோ சட்டம் என்றால் என்ன?
போக்ஸோ சட்டத்தின்படி குழந்தைகளிடம் பாலியல் ரீதியான செய்கைகள் காட்டுவது, தொலைபேசி, அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது, பாலியல் உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம். பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற கடந்த 2012ல் உருவான சட்டமே போஸோ சட்டம் (Protection of Children from Sexual Offence). சட்டம் இருந்தாலும் கூட இச்சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்