Crime: குற்றச்செயலில் ஈடுபட மறுத்த நண்பனை கழுத்தறுத்து கொன்ற கொடூரம் - 3 பேர் கைது
விழுப்புரம் அருகே நண்பர்களுடன் இணைந்து குற்றச்செயலில் ஈடுபட மறுத்ததாலும், பேசுவதை தவிர்த்ததாலும் சக நண்பர்கள் இணைந்து நண்பரை கொலை செய்த அதிர்ச்சி சம்பம் அரங்கேறியுள்ளது.
விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள கொத்தனூர் கிராமத்தில் நண்பர்களுடன் இணைந்து குற்றச்செயலில் ஈடுபட மறுத்ததாலும், பேசுவதை தவிர்த்ததாலும் சக நண்பர்கள் இணைந்து நண்பரை கொலை செய்த அதிர்ச்சி சம்பம் அரங்கேறியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள கொத்தனூர் கிராமத்தை சார்ந்த கலியபெருமாள் என்பவரது மகனான ராமச்சந்திரன்(18) 11 ஆம் வகுப்பு படிப்பினை பாதியிலையே நிறுத்திவிட்டு கூலி வேலை செய்து வந்தார். ராமச்சந்திரன் கொத்தனூரிலுள்ள பாட்டி பவுனம்பாள் வீட்டிலிருந்து தங்கி கரும்பு வெட்டும் பணிக்கு சென்று வருகிறார். ராமச்சந்திரன் அதே பகுதியை சார்ந்த மோகன்ராஜ் (20) மற்றும் கந்தசாமி, கஜேந்திரன், சிறுவன் வெற்றிவேல் ஆகியோருடன் 8 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வருகிற நிலையில் அவரது நண்பர்கள் நான்கு பேரும் போதைக்கு அடிமையாகி போதை பொருட்கள் விற்பனை செய்து அருந்துவது திருட்டில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.
இதனால் திருட்டு வழக்கில் மோகன்ராஜ் கைதாகி சிறை சென்று விடுதலையாகி வந்துள்ளார். இதனால் ராமச்சந்திரனை அவரது தாய் மற்றும் பாட்டி நான்கு நண்பர்களுடன் பழக கூடாது பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து நான்கு பேரிடமுன் ராமச்சந்திரன் பேசுவதை நிறுத்தியதால் கடந்த 4 ஆம் தேதி கொத்தனூர் பேருந்து நிறுத்ததில் சக நண்பர்களுடன் நின்றுகொண்டிருந்த மோகன்ராஜ் ஏன் எங்களிடம் பேசுவதை தவிர்க்கிறாய் என ராமச்சந்திரனிடம் கேட்டுள்ளார். அதற்கு ராமச்சந்திரன் நீங்கள் திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று வந்துள்ளதால் உங்களிடம் பேச மாட்டேன் உங்களோடு சேர்ந்தால் என்னையும் திருட்டு பையன் என்று தான் கூறுவார்கள் என கூறிவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மோகன்ராஜ் தனது சக நண்பர்களான கந்தசாமி கஜேந்திரன் வெற்றிவேல் ஆகியோருடன் இணைந்து ராமச்சந்திரன் வீட்டிற்கு இரவு சென்று அங்கிருந்த மூதாட்டியிடம் ராமச்சந்திரன் எங்கே என கேட்டுள்ளனர். அதற்கு வீட்டிற்கு வெளியே உள்ள ஊஞ்சலில் தூங்கி கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து நண்பர்கள் நான்கு பேரும் ராமச்சந்திரனிடம் மீண்டும் சண்டையிட்டு கையில் மறைந்து எடுத்து சென்ற கட்டையால் அடித்தும் கழுத்தை அறுத்தும் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர். பேரணின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த மூதாட்டி பவுனம்மாள் ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த பேரனை கண்டு அதிர்ச்சியடைந்து திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் இறந்து கிடந்த ராமச்சந்திரனை உடலை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மோகன்ராஜ், கந்தசாமி, கஜேந்திரன், சிறுவன் வெற்றிவேல் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். போலீசாரின் விசாரனையில் மோகன்ராஜ் உடன் பேச மறுத்ததாலும் திருட்டு, போதை பொருட்கள் விற்பனை செய்ய தங்களுடன் வர முடியாது என ராமச்சந்திரன் தெரிவித்ததால் நான்குபேரும் இணைந்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.