செஞ்சி அருகே நாயக்கர் கால கல்தூண் கடத்தல் - திமுக நிர்வாகிகள் மீது மக்கள் குற்றச்சாட்டு
முட்டத்தூர் கிராமத்தில் 15 ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட பழமையான ராட்சதக் கல் தூணை திமுகவினர் சட்ட விரோதமாக கடத்தி சென்றதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்கா முட்டத்தூர் கிராமத்தில் கி.பி 15-16 ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட 37 அடி நீளம் கொண்ட சுமார் 10 டன் எடையுள்ள பழமைவாய்ந்த ராட்சத கல் தூணை நேற்று இரவு உள்ளூர் திமுக நிர்வாகிகள் துணையுடன் விக்கிரவாண்டி திமுக ஒன்றிய செயலாளர் வேம்பி ரவி கனரக லாரி மூலம் கடத்தி சென்று விட்டதாக முட்டத்தூர் கிராம பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Nanjil Sampath : "சாதி அரசியல் செய்கிறார் துரை வைகோ" - நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேட்டி
மேலும், இதுகுறித்து வருவாய்த்துறையினர் மற்றும் கஞ்சனூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் திமுக பிரமுகர் என்பதால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உடந்தையாக செயல்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பேசிய கிராம பொதுமக்கள், கி.பி 15-16 ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட ராட்சத கல் தூண்கள் செஞ்சி கோட்டையை ஆட்சி செய்த நாயக்கர் ஆட்சி காலத்தில் எடுத்து செல்லப்பட்டு செஞ்சி கோட்டையில் உள்ள வெங்கட்ராமனர் ஆலயத்தில் ஆயிரம் கால் மண்டபத்தை இந்த கல் தூண்கள் கொண்டு கட்டப்பட்டது.
Actor Ajith : அஜித் அட்டகாசம்..! 4 தங்கம் - 2 வெண்கலம் வலிமை காட்டிய 'தல
எனவே வரலாற்று சிறப்புமிக்க பழமையான இந்த ராட்சத கல் தூண்களை சட்ட விரோதமாக எடுத்துச் சென்ற திமுகவினர் மீது நடவடிக்கை எடுத்தும், அந்த கல் தூண்களை மீண்டும் முட்டத்திற்கு கிராமத்திற்கு கொண்டு வந்து வைக்கவும் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சிய போக்குடன் செயல்பட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக கிராம பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
11ஆண்டுகளுக்குப் பின் ரசிகர்களை சந்தித்த அஜித்... மும்பை டூ திருச்சி நடந்தது என்ன?
Thangam Thennarasu : ஈபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு எச்சரிக்கை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்